நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். 


நீங்கள் திரைப்படங்களின் காதலாரா? அப்படியானால் இந்த தகவல்கள் உங்களுக்குத்தான்.. தீபாவளி பரிசாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்களில் பிரின்ஸ் திரைப்படம் ஏமாற்றத்தை தந்துவிட, சர்தார் மட்டும் கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையை காப்பாற்றியது. இந்த நிலையில் இந்த நவம்பர் மாதத்தில்  என்னென்ன படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் உங்களுக்கு பிடித்தமான படம் இடம் பெற்றுள்ளதாக உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம். 


லவ் டுடே 


                                             


ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியதின் மூலமாக இயக்குநராக அறிமுகமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், இந்தப்படத்தை இயக்கி இருப்பதோடு, இதில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக இப்படம் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


நித்தம் ஒரு வானம்: 


அசோக்செல்வன், ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் நித்தம் ஒரு வானம். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


 


 


                                           


காஃபி வித் காதல்


பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ள படம், ‘காஃபி வித் காதல்’. ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவ்னி சினிமா மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப்படம், வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 


 


                                             


பனாரஸ்


கன்னடத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயதீர்த்தா இயக்கத்தில், ஜையீத் கான், சோனல் மோன்டோரியோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பனாரஸ்'. இந்தப்படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 


 


                                             


யசோதா


இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் பிரபல நடிகை சமந்தா நடித்துள்ள திரைபடம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா, ராவ் ரமேஷ், உன்னி முகுந்தன்,  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தப்படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகி உள்ளது. 


 


                                           


டிரைவர் ஜமுனா


'வத்திக்குச்சி' படத்தை இயக்கியதின் மூலம் பிரபலமான இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகியுள்ளது. 


 


 


                                             


பரோல்


 ‘காதல் கசக்குதய்யா’ படத்தை இயக்கியதின் மூலமாக இயக்குநராக அறிமுகமான துவாரக் ராஜா, இந்தப்படத்தினை எழுதி இயக்கி இருக்கிறார்.  ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்த கார்த்திக் ஆர்.எஸ் மற்றும் சேதுபதி, லிங்கா படத்தில் நடித்த லிங்கா கதாநாயகர்களாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக மோனிஷா மற்றும் கல்பிக்கா நடித்துள்ளனர். இந்தப்படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.  


 


                                     


மிரள் 


பரத், வாணி போஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரித்து உள்ளார். சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. இந்தப்படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   


 


                                       


ஏஜண்ட் கண்ணாயிரம் 


 


                                         


சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஏஜண்ட் கண்ணாயிரம். மனோஜ் பிதாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்தப்படம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.