கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுக்கலாம் என சொல்லப்படுகிறது.  இந்நிலையில் கொரோனா ஊரடங்கு குறித்து நாளை தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  அதிகரித்த சூழலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கைகளும் உயர்ந்து வந்தது. இந்த நிலை மாறி கடந்த ஒரு வாரமாக  தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15 தேதி முதல் நேற்றுவரை 569622 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.




அதேநேரம் தமிழ்நாடு அரசு தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரம் காட்டி வந்தது. இந்த வகையில்  மதுரை  மாவட்டத்தில் 37 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதோடு 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்  நடைபெற்றுவரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் 3,73,769 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்து கிடங்கு என எங்கும் கொரோனா தடுப்புமருந்து கையிருப்பு இல்லை. மதுரையில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும்  தடுப்பூசி போட ஆர்வமுடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தடுப்பூசிகளை செலுத்துவதில் விரைந்து ஆர்வம் காட்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு மதுரை மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.




மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 279 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69320-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 1177 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 60457-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1009 இருக்கிறது. இந்நிலையில் 7854  கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 102 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15929 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 148 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14231-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 178 இருக்கிறது. இந்நிலையில் 1520 கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




அதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 121 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18439-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 230 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15724-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 294 இருக்கிறது. இந்நிலையில் 2421 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !