தேனி மாவட்டத்தில்‌ கொரோனா  வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று உயிரிழப்புகள் இல்லாத நிலையில் தேனி மாவட்டத்தில்‌ அதற்கு முந்தைய நாள் வரை 39854 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டிருந்தனர்‌. இவர்களில் சிகிச்சையில் குணமடைந்து‌  35939 போ்‌ வீடு திரும்பியுள்ளனர்.




மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் எண்ணிக்கை  நேற்றுவரையில் 412ஆக உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 11 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்க கடந்த  நாட்களில் அதிகரித்துவந்த நிலையில்.  நேற்று உயிரிழப்புகள் முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. முதல் கட்ட ஊரடங்கின் போது நோய் தொற்று பாதிப்பு அதிகரித்தும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், நோய் தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இறப்பு எண்ணிக்கை  கடந்துசென்ற நாட்களில் அதிகரித்து வந்தது. இப்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி  தேனி மாவட்டத்தில் இது வரையில் சுமார் 131053 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்  என சுகாதாரத்துறையினர்  தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  தேனி மாவட்டத்தில்  நகரம் மற்றும் கிராமபுறங்கள் என நேற்று வைரஸ் 263 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 436 பேர் வீடு திரும்பியுள்ளனர்.