கொரோனா பாதிப்பு பரவலாக எல்லா இடங்களிலும் குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தலைமை மருத்துவமனையில் கூட படுக்கை வசதிகள்  கிடைக்காத நிலை ஏற்பட்டது. தற்போது கிராமங்கள் அளவில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நோய் தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

 



 






மதுரை மாவட்டத்தில் கடந்த  மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்றுவரை  6,24,655 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல்  3,99,843 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் 9150 தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தது, குறிப்பிடத்தக்கது.

 








 

 


மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 192 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70503-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 901 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 65888 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1043 இருக்கிறது. இந்நிலையில் 3572 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.





 



விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 178 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43075-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 425 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40289-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 500 இருக்கிறது. இந்நிலையில் 2286 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 77  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16499-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 143 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15352-ஆக அதிகரித்துள்ளது. இன்று  4 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 186 இருக்கிறது. இந்நிலையில் 961 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 82 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,979-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 81 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17682-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5  நபர் உயிரிழந்துள்ளனர். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 314 இருக்கிறது. இந்நிலையில் 983 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 81 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25792-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 181 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 24211-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 274 இருக்கிறது. இந்நிலையில் 1307 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.