செல்லூர் கே.ராஜு என்றவுடன் முன்னாள் அமைச்சர் என்பதைவிட தெர்மாகோல் என்ற வார்த்தை தான் பலருக்கும் நினைவுக்கு வரும். வைகை அணையில் தண்ணீர் ஆவியாகும் நிகழ்வை தடுக்க தெர்மாகோல் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை மதுரை, தேனி கலெக்டர்களுடன் சென்ற அப்போதைய அமைச்சராக இருந்த செல்லூர் கே.ராஜு தெர்மாகோலை தண்ணியில் விட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். பாகுபலி போல தெர்மாகோலை தண்ணியில் விட்டு திரும்பிய அமைச்சர் கரையை விட்டு வெளியேறும் முன் தெர்மாகோல்கள் காற்றில் பறந்தது.




அப்செட்டான அமைச்சர் ஏசி காரில் கூலாக வீட்டுக் சென்றார். அமைச்சர் வீட்டுக்கு செல்லுமுன் செய்தி சேனல்களில் ஓடிய செய்தியால் மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்தன. பின் இந்திய அளவில் தலைப்பு செய்தியாக மாறி உலகம் முழுதும் பிரபலமடைந்தார்.  இதே போல் கொரோனா முதல் அலையின் போது மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு திறக்கப்பட்டது. அப்போது கொரோனா வார்டை மதுரை முன்னாள் டீன் சங்குமணி திறந்துவைத்தார். உலகமே அச்சத்தில் இருந்த சூழலில் கோர்ட், சூட்டுடன் குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் கட் செய்து கொரோனா வார்டை திறந்தது, பலரை முகம் சுழிக்க வைத்தது. கொரோனா வார்டை கோலம் போட்டு யாராச்சும் திறப்பாங்களா என்று நெட்டிசன்கள் வறுக்க ஆரம்பித்தனர். இதனால் டீன் சங்குமணி பலவாரங்களாக அப்செட்டில் இருந்தார்.


 




இந்நிலையில் செல்லூர் ராஜுவை போல தி.மு.க அமைச்சர் பி.மூர்த்தி பேமஸ் ஆக நினைக்கிறாரோ என்பது போல் மீண்டும் மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. எந்திரன் திரைப் படத்தில் ரோபோ  சிட்டிக்கு, நடிகர் சந்தானம் மற்றும் கர்ணாஸ் பூ வைத்து பொட்டு வைத்து ஆயுத பூஜைக்கு தயார் செய்வார்கள். அதனை கண்ட வசீகரன் ரஜினி ஆத்திரம் அடைவார். எவ்வளவு கஷ்டப்பட்டு ரோபோ கண்டுபிடிச்சா அதை இப்படி பண்ணிட்டீங்களே..,.டே என்பது போல் ஒரு லுக் குடுப்பார். அதைப்போல் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் புதிய டிரான்ஸ்பாரத்தை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.




 


அப்போது டிரான்ஸ்பாரத்திற்கு சந்தனம் பொட்டு வச்சு, கதம்பம் மற்றும் சம்மங்கி மாலை அணிவித்து அமக்கலபடுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் டிரான்ஸ்பாரத்தை அமைச்சர் துவக்கி வைக்க ரிப்பன் கட் செய்யும் விழாவும் எடுக்கப்பட்டது. பின்னர் டிரான்ஸ்பாரத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது போல் போஸ்கொடுத்து போட்டோ எடுத்துவிட்டு கிளம்பினார். அப்போது அங்கிருந்த சிலர் என்ன அமைச்சர் டிரான்ஸ்பாரத்துக்கே விபூதி அடித்துவிட்டார் என கிசு,கிசுத்தனர். இந்த சம்பவத்தால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை முந்தாதவரைக்கும் சரித்தேன் என மதுரையில் கமெண்டுகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.


இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!