தமிழ்நாட்டில் கடந்த 24  மணி நேரத்தில் புதிதாக 10,448 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,14,335  ஆக சரிந்துள்ளது. ஒருநாள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 270. சிகிச்சை முழுமையாகப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,058-ஆக உள்ளது.


சென்னையில் மட்டும் இன்று தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 689 ஆகும். இதனால், சென்னையில் மட்டும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 547 ஆகும். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 753 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 442 ஆகும். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த ஆண்கள் 13 லட்சத்து 98 ஆயிரத்து 206 ஆகும். பெண்கள் மட்டும் 9 லட்சத்து 90 ஆயிரத்து 502 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர்.


தமிழ்நாட்டில் மட்டும் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் ,5ஆயிரத்து 849 நபர்கள் ஆவர். பெண்கள் 4ஆயிரத்து 599 நபர்கள் ஆவர். தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 058 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 44 ஆயிரத்து 73 ஆகும்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 270 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 106 பேர் தனியார் மருத்துவமனையிலும், 164 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இன்று 270 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 7 ஆயிரத்து 920  நபர்கள் இதுவரை கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். 


கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது ஓரளவு தணிந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தினசரி ஆயிரம் என்ற அளவில் பாதிப்பு குறநை்து வந்தாலும், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Also Read: சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது