இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 990 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.






கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.