முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி இன்று போட்டுக்கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனது வழக்கமான பணிகளை முதலமைச்சர் மேற்கொள்கிறார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!’ எனப்பதிவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்