நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து. இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.


Lockdown Kanchipuram : அமலானது முழு ஊரடங்கு: முடங்கியது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம்..




இந்நிலையில் கொரோனா வைரஸ்  மூன்றாவது அலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது. மேலும் கோவில்களில் பக்தர்களுக்கு தடை, திரையரங்குகள், சலூன் கடைகள்,  உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 


TN Corona Lockdown: வெளியே போகாதீங்க மக்களே.. முழு ஊரடங்கில் எவையெல்லாம் இயங்கும்; எவையெல்லாம் இயங்காது?




இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில்  15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை பேருந்து நிலையம், காமராஜர் சாலை, பெரியகடைவீதி, கூட்டம் நிறைந்த வண்டிக்கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.




பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மக்கள் செல்வதை காணமுடிகிறது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் செல்வதை  காணமுடிந்தது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.




மேலும் மாவட்டத்தில் இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 492 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 23 ஆயிரத்து 119 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  320 உயிரிழந்துள்ளனர். தற்போது 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Actor Suriya | ‛எத்திராஜ்தான் பிடிக்கும்... என் பேரு ‛பிகில்’...’ மனம்திறந்த சூர்யா!