உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

 



 

 

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுமையாக ஊரடங்கால் முடங்கின. காஞ்சிபுரத்தின் முக்கிய பகுதிகளான பூக்கடை சத்திரம், மாவட்ட ஆட்சியராகம், பொண்ணெரிகரை, ஓரிக்கை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முடங்கின அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

 



சில உணவகங்கள் , மருந்தகம், மருத்துவமனை மற்றும் பால் கடைகள் உள்ளிட்ட மட்டுமே இயங்கி வருகிறது. சாலைகளிலும் ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. இதேபோல் செங்கல்பட்டில் மிக முக்கிய பகுதியாக இருக்கும் டோல்கேட் , மார்க்கெட் பகுதி, ராட்டினம் கிணறு உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. இரு மாவட்டங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 



 

எதற்கெல்லாம் அனுமதி

 

* உணவகங்களில் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.



* ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.

 

* உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி



* நாளையும், வார நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி.

 

* திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் காண்பித்து செல்ல அனுமதி.

 

* பால், பேப்பர் விநியோகம், மருத்துவம் சார்ந்த பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி



* போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு அனுமதி

 

* விமானம் மற்று ரயில் நிலையம் நிலையங்களுக்கு வாடகை மற்றும் சொந்த வாகனங்கள் பயன்படுத்த அனுமதி