Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 25 Jun 2021 06:17 AM
கேரளாவில் இன்று 12,078 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று 12,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 136 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 11,469 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

கர்நாடகாவில் இன்று 3979 பேர் கொரோனாவால் பாதிப்பு

கர்நாடகாவில் இன்று 3979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 138 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 9768 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் இன்று 6162 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 162 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,162 ஆக உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் மேலும் 4,981 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.6,464 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பு - நாளை முதல்வர் ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை தொடங்குகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விவரம்

நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில், 35.9 சதவிகிதம் பேர் 18-44 வயதுக்குட்பட்ட பயனாளிகள் என மத்திய அரசு தெரிவித்தது. 30 கோடிக்கும் அதிகமான  தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் போடப்பட்டள்ளன.     



 

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையின் அனைத்து மண்டலங்களைளும் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று, பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 %க்கும் குறைவாக உள்ளது.         



தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்


பிரத்தியோக ஆய்வகங்கள் தேவைப்படுகிறது- சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

உருமாறிய கொரோனா பிளஸ் வைரஸ் தொற்றை தற்போதுள்ள ஆய்வகங்களில் கண்டறிய இயலாது. தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களிலே இந்த புதிய வகை டெல்டா பிளஸ் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்


 

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 21 நாட்களில் 843 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 21 நாட்களில் 843 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு

டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முதன்முறையாக நேற்று ஒருவருக்கு டெல்டா பிளஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில், ‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா  இந்தியாவுக்கு வெளியே கண்டறியப்பட்டது. இதுநாள் வரையில்,  ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மை பற்றி யாருக்கும் தெரியாது.


 


  

Background

கடந்த 21ம் தேதி போடப்பட்ட தடுப்பூசிகளில் 63.38 சதவீதம், ஊரகப்பகுதிகளில் போடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. நாடுமுழுவதும், மாற்றியமைக்கப்பட்ட தடுப்பூசிதிட்டம் கடந்த 21ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  அன்றைய தினம் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளில், 56.09 லட்சம் தடுப்பூசிகள் ஊரக தடுப்பூசி மையங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், நகர்புறங்களில் 31.9 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும் மத்திய  சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.