ஒமிக்ரான் தொற்றானது தென்னாப்பிரிக்காவில் இருந்து மற்ற நாடுகளுக்கு படிப்படியாக பரவி தற்போது  இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் மட்டுமின்றி டெல்டா வைரசின் தாக்கமும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.


இந்தநிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு எஸ்-ஜீன் ட்ராப்பும் உறுதிசெய்யப்பட்டது. 


இதையடுத்து, 49 பேர்களிடம் இருந்து சேகரிப்பட்ட மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு அடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 


 






இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் அதிக அபாயம் மற்றும் குறைந்த அபாயம் உள்ள வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டதில் 49 பேருக்கு எஸ் -ஜீன் டிராப் எனப்படும் ஒமிக்ரான் வகையின் முதல் அறிகுறி உள்ளது என்றார். இதையடுத்து, விமான நிலையங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க :Omicron Cases in TN: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் ஊடுருவிய ஊர்கள் இவை தான்: சென்னை டாப்... மதுரை டீப்.. அலர்ட் மக்களே!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் இரவு நேர ஊரடங்கா? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


Dhanush Next Movie: தெலுங்கிலும் கால் பதிக்கும் தனுஷ்...‛வாத்தி’ கம்மிங்... புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண