உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.59 கோடியாக உயர்ந்துள்ளது.


கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவில் பரவத் தொடங்கியது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68  கோடியே 59 லட்சத்து 72 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 கோடியே 4 லட்சத்து 81 ஆயிரத்து 360 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 66 கோடி 54 லட்சத்து 90 ஆயிரத்து 990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 லட்சத்து 44 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 313 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


மேலும், 39,564 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20,441,796, பேர் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99.8 சதவீதம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் 1 சதவீதம் மட்டுமே உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 68,44,698 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


2021 ஆம் ஆண்டு கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது. இந்தியாவில் தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சத்தை கடந்து பதிவானது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 35,000 ஐ கடந்து பதிவானது. இரண்டாம் அலையில் பலருக்கும் மூச்சுத்திணறல் பிரச்சனை எற்பட்டது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி 38,50,054 போருக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு பரவ தொடங்கியதிலிருந்து அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. உயிரிழப்புகளும் குறைவாக தான் பதிவாகியுள்ளது. இதனால் உலக அளவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவில்லை. ஆனால் ஒரு சில பகுதிகளில் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வருவதால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா? செய்யாதீங்க மக்களே! தடுக்க 8 டிப்ஸ்


Chennai High Court Chief Justice: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா? யார் இவர்?