பசிக்கு உணவு அருந்த வேண்டும். ருசிக்கும், நமக்கிருக்கும் மன அழுத்தத்தை தீர்க்கவும் உணவு அருந்தினால் அது நிச்சயமாக ஓவர் ஈட்டிங் தான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு நிறைய உபாதைகள் ஏற்படும். அதை எப்படிக் கண்டறிவது? எப்படித் தடுப்பது என்பதற்கு சில டிப்ஸ்.


அதிகமாக சாப்பிடுவது என்றால் என்ன?


அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது என்றால் என்னவென்று நிபுணர்கள் விளக்கியுள்ளனர். நாம் அதிகமாக உணவு உண்ணும்போது வயிறு நம் வழக்கமான அளவைவிட அதிகரித்துவிடும். சாப்பிட்டபின்னர் வயிறு முட்டிக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு ஏற்படும். கூடவே ஒருவித அசவுகரியமும் உண்டாகும். ஒருவேளை இதை நீங்கள் உணரமுடியவில்லை என்றால் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிக்களை கணக்கிட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்கு நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக உண்டுள்ளீர்கள் என்பது தெரியவரும்.


அதிகம் சாப்பிடுவதால் என்ன நேரும்?


அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். வயிற்றில் கொழுப்பு சேரும். அதிகமான கலோரிக்கள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணார் லவ்நீத் பத்ரா. 


1. உடல் எடை அதிகரிப்பு:


அதிகமாக உணவு உண்ணுதலுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. மேலும் வயிற்றைச் சுற்றி மடிப்புகளாக சதை போடும்.


2. பசி மேலாண்மை தடைபடும்


அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் நமது பசி மேலாண்மை பாதிக்கப்படும். வயிறு இறுக்கமாக இருக்கும். வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கும்.இதனால் பசி நேரம் காலம் கருதாமல் ஏற்படும்.


3. லைஃப்ஸ்டைல் நோய்கள் வரும்


அதிகமாக உணவு உண்பது லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். இதனால் இதய நோய்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.


4. மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகும்


அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகும். மேலும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அது மூளையை பாதிக்கும்.


5. மந்தநிலையை உருவாக்கும்


நம் தேவைக்கும் பசிக்கும் அதிகமாக உணவு உண்பதால் மந்த நிலை உருவாகும். எப்போதும் சோம்பல் இருக்கும். அதனால் உடல் சோர்வாகும். அதிகமாக உணவு உண்பதால் செரடோனின் அதிகமாக சுரந்து சோர்வைத் தரும்.


6. உப்புசம்


அதிகமாக உணவு உண்பதால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு அதனால் உப்புசம் உண்டாகும். நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.


7. கல்லீரல் பாதிப்பு


அதிகமாக உணவு உண்பதால் கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பால் கொழுப்பு திசுக்களில் இருந்து லிப்போலைஸில் வெளியேறுவதும், இன்சுலின் சுரந்து குளுக்கோஸ் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதையும் தடுக்கும். சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும்.


அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி?


கவனச் சிதறல் கூடாது


நாம் சினிமாவோ டிவியோ பார்க்கும்போது சிப்ஸ், பாப்கார்ன் போன்ற உணவுகளை பாக்கெட் பாக்கெட்களாக உட்கொள்வோம். இதுதான் ஓவர் ஈட்டிங் எனக் கூறப்படுகிறது. அதனால் அதுமாதிரியான நேரங்களில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனம் சிதறாமல் கண்காணியுங்கள்.



2. ஆரோக்கியமற்ற உணவை அடையாளம் கண்டு தவிர்த்துவிடுங்கள். பாக்கெட் உணவுகள். ட்ரான்ஸ் ஃபேட் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.


3. சாப்பிடும் அளவைக் கண்காணியுங்க்ள். உங்கள் உணவு வேளையையும் அளவையும் திட்டமிட்டு உண்ணுங்கள்


4. நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளுங்கள். உங்கள் டயட்டில் புரதம் இருக்க வேண்டும். கண்ட நேரத்திலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 
 
5. நேரத்திற்கு சாப்பிடுங்கள். கண்ட நேரத்தில் சாப்பிடுவதாலும் அதிகமான அளவு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.


6. மன அழுத்தத்தை குறையுங்கள். மன அழுத்தம் இருந்தாலும் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் என்ற ஓவர் ஈட்டிங் அதிகமாகும்.


7. உணவை நன்றாக மென்று உண்ணுங்கள். எவ்வளவு தூரம் உணவை மென்று சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு தூரம் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படும். அதனால் நீங்கள் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். உடலில் கொழுப்பு சேர்வதும் தடுக்கப்படும்.


8.  உண்ணும் உணவை அறிந்து உண்ணுங்கள்: நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து உண்ணுங்கள். அதுவே மருந்து. அதுவே ஆரோக்கியம். பசிக்கு உண்ணுங்கள். பசிக்கும்போது மட்டும் உண்ணுங்கள்.