சேலம் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1764 ஆக உள்ளது. மேலும் நேற்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,30,493 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,390 ஆக உயர்வு. மாவட்டத்தில் கொரோனாவிற்கு 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 26,813 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சளி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மாவட்டத்தில் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 283 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 36,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,922 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இருவருக்கு கொரோனா பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. நோயிலிருந்து இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 372 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 62,457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,851 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.