கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு தற்போது வரை, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த 4 தடுப்பூசிகளுமே பாலூட்டும் தாய்மார்களுக்கு செலுந்த உகந்ததாகும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறினார்.
மேலும், தடுப்பூசிகளுக்கும், மலட்டுத்தன்மைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறிய அவர், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த மாடெர்னா நிறுவன தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் கடந்த மே மாதம் 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 40,000 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறினார். நோய் தொற்றில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 96.9 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும், கொரோனா அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாகவும், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Johnson & Johnson Vaccine Update: ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு டெஸ்டிங் வேண்டாம் என அறிவிப்பு
மேலும், கடந்த மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை ஊரகப்பகுதியில் 9.72 கோடி டோஸ்களும், நகரப்பகுதிகளில் 7.68 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாடர்னா தடுப்பூசியை சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.இந்தத் தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா தனது தடுப்பூசிகள் பட்டியலில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக்கை அடுத்து நான்காவதாக மாடர்னாவைச் சேர்த்துள்ளது.
Moderna gets DCGI Approval: வருது அடுத்த தடுப்பூசி : மாடர்னா இறக்குமதிக்கு இந்தியா அனுமதி!