மாடர்னா தடுப்பூசியை சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.இந்தத் தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா தனது தடுப்பூசிகள் பட்டியலில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக்கை அடுத்து நான்காவதாக மாடர்னாவைச் சேர்த்துள்ளது.
‘புதிய தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. மாடர்னா சர்வதேச அளவில் கொரோனாவுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்ட முதல் தடுப்பூசி. ஆனால் கடும்கட்டுப்பாடுகளுடன் மட்டுமே இது உபயோகிக்கப்பட உள்ளது’ என நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பக்கம் அமெரிக்க அரசு சில எண்ணிக்கையிலான மாடர்னா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளதாக கடந்த ஜூன் 27ந் தேதி அந்தத் தடுப்பூசி நிறுவனம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரிவித்திருந்தது. இதையடுத்து மாடர்னாவின் சார்பாக நேற்று சிப்லா மருந்து நிறுவனம் மாடர்னாவின் தடுப்பூசிகளை இறக்குமதி மற்றும் சந்தைபடுத்துவதற்கான அனுமதியை மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரியிருந்தது.
இதுகுறித்துக் கிடைத்திருக்கும் அதிகாரபூர்வத் தகவலின்படி இந்த மருந்துகள் முதலில் அவசரகாலத் தேவைகளுக்கு மட்டுமே பொதுநலன் கருதி உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் 100 பயனாளர்களில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஒருவாரகாலத்துக்குள் சிப்லா நிறுவனம் அறிக்கை சமர்பிக்கவேண்டும். இதையடுத்து மட்டுமே பொது உபயோகத்துக்கு தடுப்பூசியைப் பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்பு நிலவரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்காமலேயே இந்தத் தடுப்பூசியைப் பொதுப்பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என நேற்று சிப்லா நிறுவனம் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரிவித்திருந்தது. அதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரக்குழு அளித்த அனுமதி உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து சர்வதேசத் தடுப்பூசிகளுக்கான புதிய நெறிமுறைகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்தது. சர்வதேச மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் நெறிமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய விதிகளின்படி எந்தவித சோதனை முயற்சியும் இல்லாமலேயே இந்த மருந்துகளைச் சந்தைப்படுத்த