இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1 கோடி தடுப்பூசி செலுத்த வேண்டும், இல்லாவிடில்  3 வது அலையில் நாம் பெரும் சிக்கலை எதிர்க்கொள்ள நேரிடும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியக்கவியல் மற்றும் தொற்றுநோயியல் துறையின் பேராசிரியர் பிரமார் முகர்ஜி எச்சரித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியதோடு பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. தொற்றின் வேகம் குறைந்தக் காரணத்தினால் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் டெல்லியில் குறையத் தொடங்கிய தொற்றின் வேகம் கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருவதாகவும்,  இப்பொழுதே இதனைக்கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் எனவும் இல்லாவிடில் பெரும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியக்கவியல் மற்றும் தொற்றுநோயியல் துறையின் பேராசிரியர் பிரமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.





ஏற்கனவே கொரோனா தொற்று பரவிய காலத்தில் முகர்ஜியும் அவரது குழுவும் வாரந்தோறும் கொரோனா தொற்றின் விகிதங்களைச சரியாக ஒப்பிட்டு வருகின்றனர். அதன்படி  பிப்ரவரியில் இந்தியாவில் இரண்டாவது அலை வரும் என்று அவர்கள் கணித்திருந்தமையை நாம் நினைவு கூர வேண்டும்.  இந்நிலையில் தான் கொரோனா தொற்றின் 3 வது அலையினை எவ்வாறு எதிர்கொள்வது, குழந்தைகளை வைரஸ் தாக்குமா? என்பதற்கான போதுமான அறிவியல் சான்றுகள் இல்லாமல் இருப்பதாகவும் முகர்ஜி தெரிவித்துள்ளார். இருந்தப்போதும் இந்தியாவில் ஒரு நாளைக்கு 10 மில்லியனுக்கும் குறைவாக மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவது என்பது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவினைப்பொறுத்தவரை இதுவரை வெறும் 1.7 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னென்ன ஆய்வுகளை பேராசிரியர் பிரமார் முகர்ஜி குழுவினர் மேற்கொண்டுள்ளனர் மற்றும் என்ன நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.


 பெருந்தொற்றினை சமாளிக்க ஊரடங்கு அவசியம்:


மாநிலங்கள்  ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 7 நாட்கள் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் டெல்லியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  மேலும் கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மாநிலங்களின் தொற்றின் பாதிப்பு குறைந்தது. ஆனால் தற்பொழுது முழுமையான தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பினைக்குறைப்பதோடு மக்களுக்கு ஆபத்தாகவும் அமையும் என உலகலாவிய சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோயியல் துறையின் பேராசிரியர் முகர்ஜி தெரிவித்துள்ளார். எனவே மாநிலங்களில் அதீத கட்டுப்பாடுகளை உடனடியாக கொண்டு வந்தே ஆக வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுவரை  முதல் தவணை தடுப்பூசியினை டெல்லி மற்றும் கேரளத்தில் 30 சதவீத மக்கள் மற்றும் மகாராஷ்டிராவில் 20 சதவீத மக்கள்  செலுத்தி உள்ளனர். ஆனால் இந்த இந்த எண்ணிக்கை மிகக்குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக .மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில், நோய் தொற்றின் மதிப்பீடு 0.4-0.5 ஆகக் குறைந்திருந்தது. ஆனால் தற்பொழுது 0.8 வரை உயர்ந்துள்ளது, "என்றும் கூறப்படுகிறது.  எனவே கடுமையாக கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என முகர்ஜி குழுவினர் தெரிவிக்கின்றனர்.





குழந்தைகளை கொரோனா 3 வது பாதிக்குமா? என்ன செய்ய வேண்டும்?


குழந்தைகளை கொரோனா தொற்றின் 3 வது அலை அதிகளவில் பாதிக்கும் என கூறப்படும் நிலையில், அது உண்மை தானா? எப்படி அதனை தடுப்பது என்றும் இக்குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வந்து நிறைய பேரைக் கொன்றுவிடும், நிறைய குழந்தைகள் இப்பாதிப்பின் காரணமாக இறந்து விட நேரிடும் என தெரிவித்து வரும் நிலையில் தான் இதுக்குறித்து எந்தவித  மருத்துவ ஆதாரங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நம் குழந்தைகள் அதிகம் பாதித்துவிடுவார்கள் என்று நாம் பயப்படத்தேவையில்லை. இருந்த போதும் இதுப்போன்ற கருத்துக்களை கண்டுகொள்ளாமலும் சென்று விட முடியாது. எனவே குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதோடு, குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் நடைமுறையினையும் இந்தியா கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.


 


குறிப்பாக அமெரிக்க மக்கள் தொகையில் 0-18 வயதுடையவர்கள் 24 சதவீதமாகும். ஆனால் இந்தியாவில் அதன் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் 12-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே பெருந்தொற்றிலிருந்து குழந்தைகளைப்பாதுகாக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது ஆரம்பிக்க வேண்டியது அவசியமான நிலையில் இந்தியா உள்ளது எனவும் கூறுகின்றனர். ஏற்கனவே மருத்துவக்கட்டமைப்பு முறையாக இல்லாததன் காரணம் தான் இரண்டாவது அலையில் அதிக மரணங்கள்ஏற்பட நேரிட்டது எனவும் பிரமார் முகர்ஜி குழுவினர் தெரிவிக்கின்றனர்.





 இதோடு வருங்காலத்தில், தொற்றிலிருந்து மக்களைக்காப்பதற்கு  10 மில்லியன் தடுப்பூசிகளை போட  வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை. ஒரு நாளைக்கு 8 மில்லியன் அல்லது 6 மில்லியன் என வீழ்ச்சியடையும். இந்நிலையில் தான் உலக முன்னணி தொழில்துறை ஜி 7 நாடுகள் குழு ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு எவ்வளவு  தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுகின்றது என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியும் எனவும் தொற்றுநோயியல் துறையின் பேராசிரியர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.