தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 512 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,423 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,512 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 272 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 275 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 275 ஆக உள்ளது.
கோவை 563, ஈரோடு 493, சேலம் 302, திருப்பூர் 281, தஞ்சாவூர் 215, செங்கல்பட்டு 229, நாமக்கல் 173, திருச்சி 170, திருவள்ளூர் 104, கடலூர் 115, திருவண்ணாமலை 125, கிருஷ்ணகிரி 98, நீலகிரி 87, கள்ளக்குறிச்சி 99, மதுரை 70, ராணிப்பேட்டை 76, கன்னியாகுமரி 92, நாகை 32, தருமபுரி 105, விழுப்புரம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Johnson & Johnson Vaccine Update: ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு டெஸ்டிங் வேண்டாம் என அறிவிப்பு
கொரோனாவால் மேலும் 118 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 71 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 47 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8165 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை கோவையில் தலா 12 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் 9, சென்னை, ராணிப்பேட்டையில் தலா 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 24 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 39,335 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6,013 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,03,349 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 159 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 38,908 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,778 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 5873 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Covid Vaccination Update: பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்தலாம்- லவ் அகர்வால்!