தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 230 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,810 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,230 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 992 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 238 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 238 ஆக உள்ளது.
கோவை 486, ஈரோடு 395, சேலம் 268, திருப்பூர் 243, தஞ்சாவூர் 239, செங்கல்பட்டு 193, நாமக்கல் 132, திருச்சி 185, திருவள்ளூர் 104, கடலூர் 103, திருவண்ணாமலை 174, கிருஷ்ணகிரி 95, நீலகிரி 83, கள்ளக்குறிச்சி 102, மதுரை 85, கன்னியாகுமரி 75, விழுப்புரம் 66, ராணிப்பேட்டை 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Instagram new announcement : போட்டோ ஷேர் செய்ய முடியாது – இன்ஸ்டாகிராம் திடீர் அறிவிப்பு
கொரோனாவால் மேலும் 97 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 74 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 30, கோவை, புதுக்கோட்டையில் தலா 7, சென்னையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 இரண்டு நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 18 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36,707 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 4,952 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,18,882 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதிற்குட்பட்ட 111 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,833 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,981ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 6317 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Jio Annual Prepaid Plan | ஒருநாளைக்கு 3 GB இண்டர்நெட்.. அசத்தல் ப்ளானை அறிமுகம் செய்த Jio..!