செல்போன் இண்டர்நெட் பயன்பாட்டில் ஒரு புரட்சியையே செய்தது ஜியோதான். மாதத்திற்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என ஓட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாளைக்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என இணையசேவையை அள்ளி வீசியது ஜியோ. தொடக்கத்தில் இலவசமாக சிம் கார்டுகளும் கொடுக்கப்பட்டன. ஜியோவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்த ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு ஏற்ப இண்டர்நெட் கொடுக்கத் தொடங்கின. இப்படி பல அதிரடிகளை உண்டாக்கிய ஜியோ தன்னுடைய அடுத்த இலக்கை தொடங்கியுள்ளது. அந்த அதிரடி அறிவிப்பும், புதுப்புது ப்ளான்களும் இன்றும் தொடர்கின்றன. இந்நிலையில் ஒருநாளைக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் ப்ளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.




ரூ.3499 ப்ளான்:


ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானிலேயே டாப் ரீசார்ஜாக புதிய வருடாந்திர திட்டத்தை  ஜியோ  அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோவின் வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஜியோவின் மற்ற ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ க்ளவுட் போன்ற வசதிகளையும் பெறலாம். ஆனால் மற்ற நிறுவன ஓடிடி தளங்களை பயன்படுத்தும் ஆஃபர்கள் இல்லை. அன்லிமிடெட் காலிங் வசதி, ஒருநாளைக்கு 100 எஸ் எம் எஸ்கள் , 64Kbps இணைய வேகம் போன்ற வசதிகள் இந்த ஆஃபரின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு 3 ஜிபி இண்டர்நெட் வழங்கும் திட்டம் இதுவரை ஜியோவில் இல்லை. அந்தக்குறையை போக்க புதிய ப்ளானை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. திட்டம் சிறப்பானது என்றாலும் வருடாந்திர திட்டமாக இருப்பதால் அதிக வாடிக்கையாளர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 




முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோவின் 44-வது வருடாந்திர கூட்டத்தில் மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அம்பானி.


அப்போது பேசிய ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி,  ''கூகுள் மற்றும் ஜியோ குழுக்கள் கூட்டாக இணைந்து ஒரு உண்மையான  ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு பயன்பாடுகளிலிருந்தும் முழு தொகுப்பு பயன்பாடுகளையும் ஆதரிக்கும் ஒரு முழுமையான ஸ்மார்ட்போன் இது. ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் இன் உகந்த பதிப்பால் இயக்கப்படுகிறது. இது அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் அம்சங்கள் ஆகும். கூகுள் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் இருக்கும்.  இது விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும். 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குவதிலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என்றார். 


பட்ஜெட் மொபைல்ஃபோன் கலெக்‌ஷன் : அமேசானில் Sale-க்கு இன்றுதான் லாஸ்ட் டே..!