தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, தடுப்பூசி போடப்படாத ஆறில் ஒருவர் நோய்த்தொற்று ஏற்பட்ட பின் இரண்டு ஆண்டுகள் வரை கொரோனாவின் பாதிப்புகளை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.


பல மாதங்கள் தொடரும் கோவிட்


சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்கள் செய்த இந்த ஆய்வில், ஆகஸ்ட் 6, 2020 மற்றும் ஜனவரி 19, 2021 க்கு இடையில் நோய்த்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு, சராசரியாக 50 வயதுடைய 1,106 தடுப்பூசி போடப்படாதவர்கள் மற்றும், சராசரியாக 65 வயதுடைய 628 தடுப்பூசி போடப்படாதவர்கள், ஆகியோரிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதில் அளித்த பங்கேற்பாளர்களில் 17 சதவிகிதத்தினர் சாதாரண உடல்நிலைக்கு 24 மாதங்கள் ஆகியும் திரும்பவில்லை என்றும், 19 சதவிகிதத்தினர் கோவிட்-19 தொடர்பான அறிகுறிகளை 12 மாதங்கள் வரை அனுபவித்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.



தடுப்பூசி போடாதவர்களிடம் ஆய்வு


வயது, பாலினம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்ட பிற சாத்தியமான காரணிகளையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொண்டது. மாத வாரியாக குணமடைந்தவர்கள் சதவிகிதம் இந்த ஆய்வில் முக்கிய இடம் பிடித்தது. அறிகுறிகள் தொடர்ந்ததாக புகாரளித்தவர்கள் வயதானவர்களாகவும், முன்பே சில உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. அதனால் அதை மட்டுமே முழு காரணம் என்று கூறிவிட முடியாது என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் 280 உயிர்கள் பறிபோன சோகம்.. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்


மாதவாரியாக குணமானவர்கள் சதவிகிதம்


ஒட்டுமொத்தமாக, ஆய்வில் பங்கேற்றவர்களில், 55 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் தங்கள் இயல்பான ஆரோக்கியத்திற்குத் திரும்பியதாகவும், 18 சதவீதம் பேர் ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குள் குணமடைந்ததாகவும் தெரிவித்தனர். ஆறு மாதங்களில் குணமடைந்ததாக 23 சதவீதம் பேர் கூறியதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. 12 மாதங்களில் குணமடைந்தவர்கள் 19 சதவீதமாகவும், 24 மாதங்களில் குணமடைந்தவர்கள் 17 சதவீதமாகவும் உள்ளனர். 



எந்தெந்த பாதிப்புகள் தொடர்ந்தன?


நோய்த்தொற்று இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சுவை அல்லது மணம் (9.8 சதவீதம்), உடல் உழைப்புக்குப் பின் ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் உடல் பருமன் (9.4 சதவீதம்) போன்ற இரண்டு உடல் பிரச்சனைகளும் அதிகம் காணப்படுவது கண்டறியப்பட்டது. மூச்சுத் திணறல் (7.8 சதவீதம்), மற்றும் மனநலப் பிரச்சினைகள் (8.3 சதவீதம்) மற்றும் பதட்டம் (4 சதவீதம்) ஆகியவையும் இதன் விளைவாக வந்துள்ளதாக கூறுகின்றனர். "தொடர்ச்சியான சுகாதார பிரச்சினைகள் வருவது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்குவதுடன், மக்கள் சாதாரண வாழ்வை வாழ்வதில் இருந்து அவை தடுக்கின்றன" என்று கூறுகின்றனர். நீண்ட கோவிட் எனப்படும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் மற்றவர்களும் உள்ளனர், இது அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வேலை செய்யும் திறனை பாதிக்கலாம்", என்று குறிப்பிடப்படுகிறது.