உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா நோய்த்தொற்றை விட அதிக தாக்கத்தை கொண்ட நோய்த்தொற்று வரும் என்றும் அதற்காக உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு நிலையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.


கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறது என கூறப்பட்டாலும் உண்மையில் இதற்கு முன் இருந்ததை விட தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும் நோய்த்தொற்று பரவும் என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ”கொடிய நோயயை ஏற்படுத்தும் மற்றொரு மாறுபாட்டின் அச்சுறுத்தல் எஞ்சியுள்ளது, மேலும் கொடிய ஆற்றலுடன் வெளிப்படும் மற்றொரு நோய்க்கிருமியின் அச்சுறுத்தலும் உள்ளது. ஏராளமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படும்” என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இதனை அவர் 76வது உலக சுகாதார கருத்தரங்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த நோய்த்தொற்றின் அலை பரவ தொடங்கும்போது அது குறித்து விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.  


2019 ஆம் ஆண்டு சினாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கியது. 2020 ஆம் ஆண்டு அதன் தாக்கமாக இந்தியாவில் கொரோனா நோய் பரவியது. கொரோனா நோயால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் தற்போது வரை 68 கோடியே 91 லட்சத்து 24 ஆயிரத்து 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரத்து ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இரண்டாம் அலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து பதிவானது. பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.


முதல் அலையை ஒப்பிடும் போது இரண்டாம் அலையில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6591 ஆக உள்ளது. அதேபோல் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,44,49,451 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக அனைவருக்கும் இரண்டு தவனை தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை இந்தியாவில் 220 கோடியே 66 லட்சத்து ஆயிரத்து 276 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Parliament Opening Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா.. திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு


Thangam Thennarasu: முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறு பரப்புவதா? பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்


PM Modi Australia Visit: 'மோடி தான் பாஸ்...' சிட்னியில் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பிரதமர்..!