மூன்று நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு தொற்று உறுதி… பிஎப்.7 ரகமா? தயார் நிலையில் இந்தியா!

கடந்த மூன்று நாட்களில் 498 சர்வதேச விமானங்கள் சோதனை செய்யப்பட்டன. 1,780 மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நிலையில் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

Continues below advertisement

கொரோனா வைரசின் ஓமிக்ரான் பிஎப் 7 வேரியன்ட் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு டிசம்பர் 24 முதல் வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளை தோராயமாக சோதனை செய்யத் தொடங்கியது. அந்த சோதனைகளில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. "கடந்த மூன்று நாட்களில் அதாவது டிசம்பர் 24, டிசம்பர் 25 மற்றும் டிசம்பர் 26 ஆகிய தேதிகளில், ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் இருந்து வந்த 498 சர்வதேச விமானங்கள் சோதனை செய்யப்பட்டன. அதிலிருந்து 1,780 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 3,994. அதில் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது," என்று ஆதாரங்கள் ANI இடம் தெரிவித்தன.

Continues below advertisement

பிஎப்.7 ரகமா?

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட ஒத்திகை நடைபெற்றது. சில நாடுகளில் கோவிட்-19 அதிகரிக்கும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் ஒரு பெரும் போராட்டத்திற்கு தயாராகும் வகையில், கோவிட்-19 ஒத்திகையை மேற்கொண்டன. வசதிகள், நெறிமுறைகள் மற்றும் பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கோவிட்-19 ஆயத்தப் பணிகள் எந்த அளவில் சாத்தியம் என்பதை மதிப்பிடுவதற்காக இந்தப் ஒத்திகை நடத்தப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்று, இந்தப் போலிப் பயிற்சியை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்: Pongal Gift Token: பொங்கல் பரிசு தொகுப்புக்கு டிசம்பர்.30 முதல் டோக்கன் விநியோகம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..

சுகாதாரத்துறை அமைச்சர்

"நாட்டில் கோவிட் பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். கோவிட் வழக்குகள் அதிகரிப்பதால் அரசும் தயாராகி வருகிறது. இன்று நாடு முழுவதும் உள்ள கோவிட் மருத்துவமனைகளில் ஒத்திகை நடத்தப்படுகின்றன. மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று சப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சர் மாண்டவியா கூறினார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், கோவிட்-19 தொடர்பான எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை ஒத்திகைகள் நடத்தப்படும் என்று மன்சுக் மாண்டவியா கூறியிருந்தார்.

கோவிட் ஒத்திகை

டெல்லி விமான நிலையத்தில் மியான்மரை சேர்ந்த நான்கு சர்வதேச பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டதற்கு பிறகு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் கோவிட் வழக்குகள் அதிகரிப்பதாக அறிக்கைகள் வந்துள்ளதால், மற்றொரு அலை ஏற்பட்டால் அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் தயார்நிலையில் உள்ளதா என்பது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒடிசாவில் சுகாதார சேவைகள் இயக்குனர் பி.கே.மஹாபத்ரா நேற்று பேசுகையில், "எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதை அறிய இன்று ஒத்திகை நடத்தப்படுகிறது. முழு கண்காணிப்பு மற்றும் அனைத்து தளவாடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நமது மாநிலத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் உள்ளது. ஏதேனும் குறைபாடு இருந்தால் ஒத்திகையின் போது கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யப்படும்", என்றார். ஜம்முவில் உள்ள காந்தி நகரில் உள்ள (MCH) மருத்துவமனை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனை ஆகியவற்றிலும் ஒத்திகைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola