குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.


டோக்கனில், எந்த நாள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.


ஜனவரி 2-ஆம் தேதி துவக்கம்


பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 2-ஆம் தேதி வழங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை சேர்க்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேறு சில பொருட்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதலமைச்சர் பரிசீலனை செய்து முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். 


மேலும், பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கமாக நேரடியாக வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.


பொங்கல் பரிசு தொகுப்பு:


வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.


தை பொங்கல்:


2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: Pongal 2023 Gift: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.. பொங்கல் பரிசு கிட்டில் என்னென்ன? அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..


Also Read: CM Stalin: "நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக்கொண்டவர்கள்; பழமைவாதிகள் அல்ல.." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!