சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


விருதுநகரைச் சேர்ந்த தாய்-மகள் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உலகில் பரவும் கொரோனா:


சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலானது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வரவுள்ள நிலையில், மக்கள் பல இடங்களில் கூட்டமாக கூடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பல மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.


கொரோனா தொற்றானது, கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. உருமாறிய கொரோனா  வைரஸ் (  BF.7 வகை  ) இந்தியாவிலும் பரவி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.






ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே, அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


விருதுநகரைச் சேர்ந்த இருவருக்கு தொற்று:


குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும், உருமாறிய ( BF.7 வகை ) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.


இந்நிலையில், சீனாவிலிருந்து இலங்கை வழியாக, மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதாவது, விருதுநகரை சேர்ந்த தாய்-மகள் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று பாதித்த  2 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.