குளிர்காலத்தில், நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து, சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான பிரச்சனைகளுக்கு நம்மை ஆளாக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உலர் பழங்கள், பச்சைக் காய்கறிகள், உள்ளிட்ட பொருட்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கடலை, வெல்லம், எள் மற்றும் உலர் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் சிக்கி உதவுவதாக கூறப்படுகிறது. 


நிலக்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கி,  இந்தியர்களால்  விரும்பி உண்ணப்படும் ஒரு முக்கிய ஸ்நாக் ரெசிபி. வேர்க்கடலை வெல்லம் சேர்த்து செய்யப்படும் பர்ஃபி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சரியான சமநிலையை வழங்குகிறது. வெல்லத்தில் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்ட்டி - ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 


வேர்க்கடலை பர்ஃபி செய்முறை 


வேர்க்கடலையை வறுத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.


ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, வெல்லம் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்து, வெல்லம் உருகி கெட்டியாகும் வரை கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 


பாகு கூடி வரும் வரை கொதிக்க விட வேண்டும். பாகில் ஒரு துளியை குளிர்ந்த நீரில் விட்டுப் பார்த்து பாகு கூடி விட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பாகு கூடியதும் வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். தட்டில் நெய் தடவி தயார் செய்த கலவையை பரப்பவும்.
கலவையை 1 அங்குல தடிமன் வரை பரப்பவும் முழுவதுமாக ஆறியவுடன் சதுரத் துண்டுகளாக வெட்டி காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். 


( குறிப்பு: அடி கனமான வாய் அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, வெல்லத்தின் நான்கில் ஒரு பங்கு அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். வெல்லம் தீயில் உருகி வரும் போது கரண்டியால் தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வெல்லம் முழுவதுமாக உருகி கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது அரை டம்ளர் குளிர்ந்த தண்ணீரில் ஒரு துளி வெல்லப்பாகை விட்டுப் பார்க்க வேண்டும். வெல்லத்துளி நீருக்கடியில் சென்று கரையாமல் முத்துப்போல் நின்றால் பாகு கூடிவிட்டது என அர்த்தம். பாகு தண்ணீரில் கரைந்தால் பாகு கூடவில்லை என அர்த்தம். மேலும் ஓரிரு நிமிடம் கொதிக்க விட்டு இதே முறையில் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ) 


மேலும் படிக்க 


Putin - PM Modi : "பிரதமர் மோடிய பார்த்தா ஆச்சரியமா இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்