கருவுற்றிருக்கும் காலத்தில் பதட்டத்தை அனுபவிக்கும் பெண்கள், பதட்டம் இல்லாதவர்களைக் காட்டிலும் முன்னதாகவே குழந்தை பிரசவிப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஹெல்த் சைக்காலஜி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், முன்கூட்டிய குழந்தைப் பிறப்பைத் தடுக்க பேறு காலத்தில் எப்போது, ​​​​எப்படி சிறந்த முறையில் இதுபோன்ற மனக்கவலையை கண்டறிவது எனப் புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு உதவும் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய சூழலில் கருவுறுதலைப் பற்றிய கவலை என்பது ஒரு சக்திவாய்ந்த உளவியல் நிலை, இது பிரசவத்தை பாதிக்கலாம் என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர் கிறிஸ்டின் டங்கல் ஷெட்டர் நிறுவியுள்ளார்.


"தற்காலத்தில், தாய் மற்றும் குழந்தைக்கு மகப்பேற்றுக்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வின் சிக்கல்களைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள பல மருத்துவமனைகளில் மனச்சோர்வு அறிகுறிகள் குறித்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. இது மற்றும் பிற ஆய்வுகள் கருவூற்றிருக்கும் பெண்களின் கவலையையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றன," என்று டங்கல் ஷெட்டர் கூறினார். முந்தைய ஆராய்ச்சியில் நான்கில் ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவரீதியாக அதிக அளவிலான டிப்ரஷனுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும், முன்கூட்டிய பிறப்பு அல்லது கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன் குழந்தை பிறப்பதற்கு இதுபோன்ற கவலைக் காரணியாக இருக்கலாம் என்றும் ஆய்வு கண்டறிந்துள்ளது. 


டென்வரில் சுமார் 196 கருவூற்றிருக்கும் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது அவர்கள் கர்ப்பத்தின் முதல் மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலத்தில் பெண்களுக்கு நான்கு வெவ்வேறு கவலை அளவுகோல்களை வழங்கினர். அளவீடுகளில் ஒன்று பொதுவான கவலைக்கான ஐந்து-கேள்விகளை உள்ளடக்கிய ஸ்கிரீனர் மற்றும் இதர மூன்று கருவூற்றிருக்கும் காலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 10 கேள்விகள் மற்றும் கருவுற்றிருப்பது தொடர்பாக ஏற்படும் கவலை குறித்து நான்கு கேள்வி என பல்வேறு கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன.




மூன்றாவது ட்ரைமெஸ்டரில் கருவுற்றிருப்பது தொடர்பான கவலை முந்தைய பிரசவங்களுடன் மிகவும் வலுவாக தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், முதல் மூன்று மாதங்களில் பொதுவான கவலையும் குழந்தை முன்கூட்டியே பிறப்பதற்கான காரணங்களில் ஒன்றாக  என்று அவர்கள் கூறினர். கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் பொதுவான கவலைகள், மருத்துவ அபாயங்கள், குழந்தை, பிரசவம் மற்றும் பெற்றோருக்குரிய பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி கர்ப்பத்தின் பிற்பகுதியில் பெண்கள் கவலைப்படுவதற்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்கனவே அந்தப் பெண்களுக்கு இருக்கும் மருத்துவ அபாயங்களைக் கணக்கில் கொண்டு இந்த முடிவுகள் திருத்தி அமைக்கப்பட்டன என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


"பொதுவான கவலை அறிகுறிகளுடன் கருவுற்றிருக்கும்  அனைத்து பெண்களும் பின்னர் கருவுறுதல் சார்ந்த கவலையை எதிர்கொள்ள மாட்டார்கள் என்றாலும் கருவுறுதல் தொடர்பான கவலை கொண்டிருப்பவர்களுக்கு முன்கூட்டியே பிரசவம் நிகழ்கிறது என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன" என்று ஆய்வாளர் டங்கல் கூறுகிறார். பெண்களுக்குப் பொதுவாகவே மனச்சோர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், கர்ப்பத்தின் ஆரம்பத்தில் பொதுவான கவலைக்காகவும் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. கூடவே நிகழ்த்தப்பட்ட சர்வேயில் அதிக மனக்கவலை உள்ள பெண்களுக்கு அவர்களுடைய மன ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.