தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இது சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி வேடத்தில் வந்த அம்மன் மோகினியை அழைத்ததை தொடர்ந்து தேவியம்மாவையும் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அம்மன் சூர்யாவிடம் உன் பொண்டாட்டி என்னுடைய சன்னதியில் தான் இருக்கா, போய் காப்பாத்திக்க என்று சொல்லி அனுப்ப சூர்யா, மாரியை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வீட்டுக்கு வந்த மாரி தேவி அம்மாவுக்கு நன்றி சொல்லி பிறகு சூர்யாவிடம் ஹஸ்பெண்ட் சார் உங்க மடியில படுத்துக்கணும் போல இருக்கு என்று சொல்லி படுத்துக் கொள்கிறாள்.
மறுபக்கம் ஜாஸ்மின் சூர்யா மாரியை பாதுகாப்பதில் ரொம்ப தீவிரமா இருக்கிறாள், எதையும் ஜாக்கிரதை தான் செய்யணும் என்று சொல்லி கோரக்கிடம் வந்து கொஞ்ச நாளைக்கு தலைமறைவாக இருக்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரேன் என்று சொல்ல கோரக் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
பிறகு ஜாஸ்மின் இனி உங்களுடைய விருப்பம் என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது சூர்யா போலீஸ் ஓட வர அதிர்ச்சி அடையும் அவள் கோரக்கிடம் சென்று நான் இங்கே ஒளிஞ்சுக்குறேன், என்னை காட்டி கொடுத்து விடாதீங்க என மறைந்து கொள்கிறாள்.
பிறகு சூர்யா போலீஸ் உடன் வர மாயாஜாலம் செய்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ய போலீஸ் அவரை சுற்றி வளைத்து விடுகின்றனர். இந்த நேரம் பார்த்து அங்கு வரும் தேவி அம்மா இவனை சும்மா விடக்கூடாது என்று சொல்லி கழுத்தில் கயிற்றை போட்டு தூக்கில் தொங்கவிட போலீஸ் மந்திரவாதி என்பதால் மாயாஜாலத்தில் இப்படி செய்திருக்கலாம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் சூர்யா இது தேவியம்மாவுடைய வேலை தான் என்பதை புரிந்து கொள்கிறான். பிறகு வெளியே வந்த ஜாஸ்மின் கோரக் மரத்தில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைய சூர்யா இவளை பார்த்து விடுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
IND Vs AUS 3rd T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஆஸ்திரேலியா உடன் இன்று 3வது டி20 போட்டி