இன்று யோகி படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், சூர்யா 42 படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.






யோகி படத்தில் நடித்து வெறும் பாபுவாக இருந்த இவர், யோகி பாபுவாக மாறினார். வாரவாரம் வெள்ளிக்கிழமையானால் 4 படங்கள் வெளியாகும் வாடிக்கை இருந்து வருகிறது. அந்த 4 படங்களில், 3 படத்திலாவது யோகி பாபு நடித்துவிடுகிறார். இப்படியாக தனது தோற்றத்தை வைத்தே புதுவிதமான பாணியை உருவாக்கி பல திரைப்படங்களில் நடித்து எக்கசக்கமான ரசிகர்களை தன் வசத்தில் வைத்துள்ளார் யோகி. 


சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பரமணிய கோவிலில் சாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு,   “கதையை வைத்துதான் நான் படம் நடித்து வருகிறேன். ஹீரோவாக நான் எதிலும் நடிக்கவில்லை. காமெடிதான் எனக்கு கைக்கொடுத்தது அதை தாண்டி என்னால் போக முடியாது.” என யோகி பாபு பேசினார்.






இதனையடுத்து, தாதா எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.  அப்போது நான் ஹீரோவாக நடிக்கவில்லை என்று யோகி பாபு கூறியிருந்தார்.  தற்போது வெளியான தாதா படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டின் போஸ்டரிலும்  யோகி பாபுவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் யோகி பாபு, “இந்த படத்தில் நான் ஹீரோ கிடையாது. இதன் ஹீரோ நிதின் சத்யா ஆவார். அவருக்கு நண்பராக நான் நடித்துள்ளேன். நான் ஹீரோ இல்லை மக்களே நம்புங்க” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க : Avatar Best Scenes: ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை.. ரசிகர்களை வாவ் சொல்ல வைத்த அவதாரின் அளப்பரிய காட்சிகள்!