இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளைக்கு பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் வரும் டிசம்பர் 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், துணைச்செயலாளர் மற்றும் அலுவலக உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி வரும் 6-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


முதலில் இணையதளத்தின் வாயிலாக தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கிருஷ்ணகிரியில் நடத்தப்பட்ட தேர்தல் நடத்துவது தொடர்பான கூட்டத்தில் நேரடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.




மொத்தம் 2 ஆயிரத்து 400 வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சுமார் 530 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


அவர் தொடர்ந்த வழக்கில், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தேர்தலின் உறுப்பினர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்றும், இந்த தேர்தலை ஒரு பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு சிறப்பு தேர்தல் அதிகாரியை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.




இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்குத் தொடர்பாக பல் மருத்துவ சங்க மாநில பொறுப்பாளர்கள் நாளைக்குள்( 29-ந் தேதி) பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். பல் மருத்துவ சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில், தொடரப்பட்டுள்ள இந்த வழக்கால் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க:உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? பயங்கரவாதி என அழைத்த பேராசிரியருக்கு இஸ்லாமிய மாணவன் சரமாரி கேள்வி..!


மேலும் படிக்க: Delhi murder case: டெல்லி கொலை வழக்கு: ஷ்ரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக அளித்த ஆப்தாப்: வெளியான திடுக் தகவல்