Just In





Yezhu Kadal Yezhu Malai: வெளியானது ’எழு கடல் ஏழு மலை’ திரைப்பட ட்ரெய்லர்!
Yezhu Kadal Yezhu Malai: ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ ஏழு கடல்..ஏழு மலை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது,

’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ராம் இயக்கியிருக்கும் ’ஏழு கடல் ஏழு மலை’ (Yezhu Kadal Yezhu Malai) திரைப்படத்தில் அஞ்சலி, நிவின் பாலி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் மார்ச் மாதம் திரையில் வெளியிடப்படுகிறது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இயக்குநர் ராமின் திரைப்படங்கள் தனித்துவமானவை. கதை சொல்லும் விதமும் அப்படியே. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய நான்கு படங்களின் கதையும் அது முன்வைத்த விசயங்களும் முக்கியமானவை. மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வை கடத்தும் அளவிற்கு இருக்கிறது.
சர்வதேச திரைப்பட விழா:
’ ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது. தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ, பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு டிரீட்டாக அமைந்தது. ரசிகர்கள் இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஏழு கடல்..ஏழு மலை ட்ரெய்லர் வெளியீடு:
திரைப்பட ட்ரெய்லரில் ரயில் நடக்கும் உரையாடல் அல்லது விவாதம் போல் உள்ளது. ஓர் தீபாவளி இரவு இரண்டு நபர்கள் சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒருவர் மரணமற்ற நபர். அவர் நிவின் பாலி. ரயில் பயணத்தின் நடுவே சந்திக்கும் இரண்டு நபரின் வாழ்க்கை கதையாக இருக்கலாம். ரயில் பயணத்தில் எலி ஒன்றிற்கு காயம் ஏற்படுகிறது. அதை நிவின் பாலி கவனமுடன் பார்த்துகொள்கிரார். இப்படியே ட்ரெய்லர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.