’கௌரவம்’, ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் யாமி கௌதம் இந்தி இயக்குநர் அதித்ய தர்ரை மணந்துள்ளார். யாமி கௌதம் விக்கி டோனர், பத்லாபூர், டோட்டல் சியப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர். பாலிவுட் திரைப்படப் பாடலாசிரியராகப் பணிபுரிந்த அதித்ய தர் 2019-ஆம் ஆண்டில் வெளியான ’உரி-தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ திரைப்படத்தை இயக்கியவர். அந்தத் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றது. அதித்ய தர்ரின் இந்தப் படத்தில் யாமியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






தங்களது திருமணம் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யாமி,

‘உனது ஒளியில் நான் நேசிக்கக் கற்றுக்கொள்கிறேன் -ரூமி

எங்களது குடும்பத்தினரின் ஆசியுடன் இன்று நெருக்கமானவர்கள் முன்னிலையில் நாங்கள் இன்று திருமணம் செய்துகொண்டோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தை எங்களது மிக நெருங்கிய உறவுகளுடன் கொண்டாடினோம்.

நட்பும் காதலுடனும் தொடங்கியிருக்கும் எங்களுடைய இந்த புதிய பயணத்தில் உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் கோருகிறோம்

அன்புடன்
யாமி மற்றும் அதித்யா, எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாமி-அதித்யா இணையர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Also Read:இந்தியாவுக்கு எத்தனை தடுப்பூசி? - அறிவித்தார் அமெரிக்க அதிபர் பைடன்