பருத்தி வீரன் படத்தில் இடம்பெற்ற “அறியாத மனசு” பாடலை இளையராஜா பாடிய அனுபவம் குறித்து இயக்குநர் அமீர் பகிர்ந்துள்ளார்.
கலாட்டா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இது குறித்து அவர் பேசும் போது, “பருத்தி வீரன் படத்தில் இடம்பெற்ற அறியாத வயசு புரியாத மனசு பாடலை இளையராஜா பாடுவதற்காக வந்திருந்தார். அவர் பாடியபோது அதில் எனக்கு இரண்டு இடங்களில் கரெக்ஷன் இருந்தது. அதை எப்படி அவரிடம் சொல்வது என்று தெரியாமல், இதை நான் அங்கிருந்த சேகரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் இதனை இளையராஜா கவனித்துவிட்டார். உடனே என்னிடம் என்னய்யா.. என்றார்.. அப்போது நான் பாடலில் இராண்டாவதாக வரும் “அறியாத வயசு புரியாத மனசு வரியை கொஞ்சம் ஊஞ்சல் மாதிரி பாடினால் நல்லா இருக்கும் என்றேன். உடனே நல்லாவாய்யா இருக்கும் என்றார். உடனே நான் ட்ரை பண்ணி பாருங்க சார் என்றேன். உடனே அவர் அதை பாடி கொடுத்தார். பாடி முடித்த பின் என்னிடம் இளையராஜா நல்லாவாய்யா இருக்கு.. என்னாமோ கேக்குறீங்க.. என்றார்.
இன்றைக்கும் நீங்கள் அந்தப் பாட்டை கேட்கும்போது அந்த இடம் மட்டும் ஹைலைட்டா இருக்கும். எனக்கு இன்றைக்கும் அந்தப் பாட்டை கேட்கும்போது, அது எனக்கு வேற ஒரு மூடை கொடுக்கும். அவரோட இசை நம்மளோட படைப்புகளில் இருக்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அவரிடம் எனக்குள் தோன்றுவதை எப்படி கூறி வேலை வாங்குவது தயக்கம். படைப்பு உருவாக்கத்தில் எழுதி அழிப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் பெரிய ஆட்களுடன் வேலை செய்யும்போது, இதில் பிரச்னை எழும். அதனால்தான் நான் எனக்கு தோதுவான ஆட்களுடன் வேலை செய்கிறேன்” என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்