கனா, திட்டம் இரண்டு, பூமிகா என அண்மையில் அட்ரினலின் ரஷ் படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யாவுக்கு பொங்கலுக்காக ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கிடைத்துள்ளது. நியூ இயர் மற்றும் கிறுஸ்துமஸைக் கொண்டாட்டமாக துபாயில் கொண்டாடிவிட்டுத் திரும்பியிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு அடுத்து பொங்கல் பரிசாக பொங்கல் பேஸ்கட் நிறுவனம் ஒரு ஸ்வீட் கரகர மொறுமொறு சர்ப்ரைஸை அனுப்பியுள்ளது.
இதில் கோவில்பட்டிக் கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரூன், காரைக்குடி அதிரசம், திருவில்லிப்புதூர் பால்கோவா என அந்தந்த ஊர் ஸ்பெஷல் ஐட்டம் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா.
இந்தப் பொங்கல் பொட்டலம் அதன் அளவைப் பொறுத்து 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை பொங்கல் பேஸ்கட் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. நீங்கள் இப்படி வித்தியாசமாக உங்கள் உறவினர்களுக்குப் பொங்கல் கிஃப்ட் அனுப்பலாமே நண்பர்களே.