பிரபல மியூசிக்கல் ஆப் ஸ்பாடிஃபை, இசைஞானி இளையராஜாவின் எவர்க்ரீன் பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறது. இந்த ப்ளேலிஸ்ட் இப்போது தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இளையராஜாவுடன் இணைந்து ஸ்பாடிஃபை சார்பில் தயாரிக்கப்பட்ட விளம்பரப்படம் ஒன்று நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ”சந்தோஷமோ, கவலையோ, உற்சாகமோ, உத்வேகமோ, பக்தியோ, பாசமோ, காதலோ, காதல் தோல்வியோ அதற்கேற்ற ப்ளேலிஸ்ட் இருக்கிறது” என ராஜா பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில், டைம்ஸ் சதுக்கத்தில் இப்போது ராஜாவின் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது உலக ராஜா ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி அன்று இளையராஜாவின் பேனர் அடங்கிய வீடியோ டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பானது. டைம்ஸ் சதுக்கத்தில் ராஜாவின் பேனர் ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறை.
மேலும் படிக்க: 45 ஆண்டு கால இசைஞானி இளையராஜா பயணத்தில்: 90 கிட்ஸ் ஃபேவரைட்10 பாடல்கள்
டைம்ஸ் சதுக்கத்தில் ராஜா:
இளையராஜாவிற்கு விருப்பமான திருவண்ணாமலை தீபம் அன்று டைம்ஸ் சதுக்கத்தின் பில்லிபோர்டில் அவரது வீடியோ ஒளிபரப்பானது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம், இது அவரது பயணத்தில் ஒரு மைல்கல் என இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.
அடுத்து, விடுதலை, மாயோன், துப்பறிவாளன் 2, தமிழரசன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் இளையராஜா. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியீடுக்காக காத்திருக்கின்றன.
'ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லை' என்ற பாடலை இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. அவருடைய திறமைக்கு ஏற்ப இந்தப் பாடலும் வரியும் அவருக்கு எவ்வளவு பொருத்தம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுபோன்று அமைந்தது தான் மற்றொரு பாடல் வரி, "நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா". இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப 45 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் திரை இசை உலகில் கால் பதித்தாலும் அவருடைய இசை காலம் கடந்து அழியாத ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்