உலககோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியுடன் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில், 2021 ஐபிஎல் தொடர் பர்பிள் கேப் வின்னர், ஹர்ஷல் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அறிமுகத்திற்கான இந்திய அணி தொப்பியை முன்னாள் இந்திய அணி வீரர் அஜீத் அகார்கரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.






அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு ராகுல், ரோஹித் அதிரடி ஓப்பனிங் கொடுத்தனர். இரு வீரர்களும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 100 ரன்கள் எட்டும் வரை விக்கெட் விழவில்லை. போட்டியின் 14வது ஓவரில்தான் ராகுல் (65) அவுட்டானார். அவரை அடுத்து ரோஹித் (55) அவுட்டாகி வெளியேறினாலும், வின்னிங் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் ரிஷப் பண்ட். 17.2 ஓவர்களில், 155 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதனால் 7 விக்கெட் இழப்பிற்கு போட்டியை வென்று அசத்தியது ரோஹித் அண்ட் கோ.


இரண்டு டி20 போட்டிகளை வென்றதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ராகுல் டிராவிட் - ரோஹித் ஷர்மா கூட்டணியில் எதிர்கொண்ட முதல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண