சன்னி லியோன் பேரில் மோசடி 


பாஜக அரசு சார்பாக மாதாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மாதாமாதம் ரூ 1000 வழக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பிரபல நடிகை சன்னி லியோனின் பேரில் ஒரு வங்கி கணக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை மாவட்ட கலெக்டர் ஹரிஷ் கண்டறிந்துள்ளார். விசாரித்ததில் விரேந்திர ஜோஷி என்பவர் இந்த கணக்கை கையாண்டு வருவது தெரியவந்துள்ளது. சன்னி லியோன் பெயரில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி மாதாமாதம் ரூ 1000 உதவித் தொகையை விரேந்திர ஜோஷி பெற்று வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சன்னி லியோனின் கணவராக பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த நிகழ்வு பாஜக அரசு மீதும் இத்திட்டத்தின் மீதும் மேலும் பல கேள்விகளை தொடங்கி வைத்துள்ளது. 


மாதாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் பெற்றுவரும் 50 சதவீதம்  கணக்குகள் போலியானவை தான் என்று காங்கிரஸ் மாநில தலைவர் தீபக் பைஜ் குற்றம்சாட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பணம் பெற்றுவரும் அனைத்து கணக்குகளையும் தீவிரமாக பரிசோதிக்கும்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 






சன்னி லியோன் பேயரில் முந்தைய சர்ச்சைகள்


இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சன்னி லியோ புகைப்படத்தை வைத்து ஒரு சர்ச்சை எழுந்தது. உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு, நடிகை சன்னி லியோன் பெயரில் வெளியான ஹால்டிக்கெட் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. 


கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த ஒரு மாணவி தனது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தபோது,  அதில் அவரது புகைப்படம் இடம்பெறாமல் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.