Viruman Audio Launch LIVE: மதுரையில் விருமன் ஆடியோ வெளியீட்டு விழா: நொடிக்கு நொடி அப்டேட் இதோ!
Viruman Audio Launch LIVE Updates: விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து வருகிறது. அது தொடர்பான அப்டேட் இதோ.
அம்மா, அப்பாவை கெளரவிக்க இந்த மேடையைப் பயன்படுத்திக்கிட்டேன் - இயக்குநர் முத்தையா
கார்த்தியின் உயரத்தையும் பார்த்துவிட்டு போவதற்கு, எனக்கு ஆயுள் நீளட்டும் - பாரதிராஜா
முத்தையா பெண் கதாபாத்திரங்களை சரியா வடிவமைப்பார். என் மகள் பாதுகாப்பான கைகள்ல இருக்கான்னு நினைச்சேன் - இயக்குநர் ஷங்கர்
குதிரையில் ஏறினால் வந்தியத்தேவன், கைலியை ஏத்தி கட்டினால் மதுரக்காரன் - கார்த்தியை பற்றி பேசிய சு.வெங்கடேசன்
கோவில் கட்டுறதை விட, அன்னசத்திரம் கட்டுறதை விட படிக்க வைக்கிறது ஆயிரம் ஜென்மம் பேசும். சூர்யா குடும்பம் வாழும் - நடிகர் சூரி
ஷங்கர் மகள் அதிதி அறிமுக நடிகை மாதிரியே இல்ல. அசத்திட்டாங்க - இளவரசு
தென் தமிழ்நாட்டு படங்கள் நல்லா ஓடுது. மேலும் மேலும் படம் பண்ணனும் - ஆர்.கே சுரேஷ்
”சினிமாவை தவிர எங்களுக்கு வேற பிழைப்பு இல்ல” : வடிவுக்கரசி
45 வருஷம் கழிச்சு இப்படி ஒரு மேடைக்கு பேச வந்திருக்கேன்.. வடிவுக்கரசி பேச்சு
மேடையில் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் தற்போது பேசி வருகிறார்.
ரோலக்ஸ், ரோலக்ஸ் என ரசிகர்கள் அரங்கம் நடுங்க கர்ஜிக்க நடிகை அதிதியும் ரோலக்ஸ் என கத்தினார்.
விருமன் படத்தின் கதாநாயகி அதிதி சங்கர் நடிகர் கார்த்தி பக்கத்தில் அமர்ந்தார்.
இசை வெளியீட்டு விழாவை தொகுப்பாளர் அஞ்சனா மற்றும் விஜய் துவங்கி வைத்தனர்.
நிகழ்ச்சி நடைப்பெறும் ராஜா முத்தையா மன்றத்திற்கு நடிகர் கார்த்தி வருகை.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே சுரேஷ், கருணாஸ் பங்கேற்பு.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மூன்று தடுப்புகள் அமைக்கப்பட்டு வி.ஐ.பிக்கள் ஒருபுறமும், நடிகர் நடிகைகள் ஒருபுறமும், ரசிகர்கள் ஒருபுறமும் அமர்ந்துள்ளனர்.
விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் சூரி மற்றும் ரோபோ சங்கர் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக விருமன் பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தில் போலீஸ் குவிப்பு
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியை ஒரே மேடையில் நேரில் காண ராஜா முத்தையா மன்றத்தில் திரளான கூட்டம் குவிந்துள்ளது.
நடிகர் சூர்யாவை நேரில் காண, மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் குவிந்த சூர்யா ரசிகர்கள்.
மதுரையில் நடக்கும் விருமன் பட இசை வெளியீட்டு விழாவை நேரில் காண:
2 டி தயாரிப்பு நிறுவனத்தின் லேட்டஸ்ட் ட்வீட்
விருமன் பட இசை வெளியீட்டு விழாவிற்கு டிக்கெட் வாங்கிய சூர்யா ரசிகர்கள்.
விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வந்த நடிகர் சூர்யா.
இசை வெளியீட்டு விழாவில் நேரில் காண குவிந்த ரசிகர் கூட்டம்.
மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தின் மேடை
ராஜா முத்தையா மன்றத்தில் விருமன் பட இசை வெளியீட்டு விழாவையொட்டி மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
Background
Viruman Audio Launch LIVE Updates:
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விருமன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “ விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.
இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார்.
முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -