கில்லி, கிரீடம், குருவி போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விமல், பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்தார். விமலில் எதார்த்தமான பேச்சும், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் விலங்கு என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 18ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய நடிகர் விமல் , விலங்கு வெப் தொடர் திருச்சியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக படமாகும்.



இந்த படத்திற்காக ப்ரோமோஷன் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அதில் அவர் பேசியதாவது, "இந்த படத்துல வந்து எனக்கும் 3 வருஷமா படம் இல்ல. வீட்ல சும்மா உக்காந்து இருக்கேன். நான் கதாநாயகன், மதன் ஜேம்ஸ் கொடிகட்டி பறந்தாரு அவரும் 3 வருஷம் ஆஃபீஸ்ல சும்மா உக்கார்ந்து இருக்கார். அவரு ப்ரொடியூசர், ஒரு படத்தை எடுத்து ஃப்ளாப் கொடுத்தான் பிரசாந்த், அவன் இயக்குநர். கேக்கவே எப்படி இருக்கு. இந்த மூணு போரையும் நம்பி ஜி5 இந்த வேலையை கொடுத்ததுக்கு அவர்களை தான் பாராட்ட வேண்டும். 10 வருஷம் நல்லா படங்கள் நடிச்சிட்டு திடீர் சறுக்கல்கள் வந்தப்போ அதில இருந்து மீண்டு திரும்ப படம் கிடைக்குறதே பெரிய விஷயமா ஆகிடுச்சு. எல்லாத்துக்கும் முக்கியமான காரணம் படங்கள் தேர்வு செஞ்சதுதான். பழக்கத்துக்காக அவர் சொல்றார் இவர் சொல்றார் என நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் இனிமேல் எனக்கு பிடித்தால் மட்டும் நடிப்பேன். அது சரியா போகவில்லை என்றாலும் பெரிதும் நம்மை பாதிக்காது. அந்த 10 வருடங்களை விட இந்த 3 வருடங்கள் தான் இன்னும் அதிகமா கத்து கொடுத்துருக்கு.



படம் பண்ணாம இருந்தப்ப என்னென்னவோ பேசினாங்க, 'விமல் எப்புடி ஆடுனான், இப்ப எப்படி இருக்கான் பாரு'ன்னு சொன்னாங்க. நெறைய விமர்சனங்கள் வந்தது. விலங்கு படத்தோட ட்ரெய்லர் வந்ததுக்கு அப்புறம், இது ஒரு கம்பேக்கா இருக்கணும்ன்னு நெறைய பேர் கமென்ட் பண்ணாங்க. இது இருக்கும்ன்னுதான் நம்புறேன். இதுக்கு அப்புறம் துடிக்கும் கைகள் ஒரு வேற மாதிரி திரைப்படமா இருக்கும். குலசாமில என் பாத்திரம் ரொம்ப சீரியஸா இருக்கும், தெய்வ மச்சான் படத்தில பழைய விமல பாப்பீங்க. இப்படி மறுபடி மார்க்கெட் உயரனும்ன்னு ரொம்ப வித்யாசமான கதைகள தேர்வு செய்யுற பக்குவம் இந்த வீழ்ச்சிலதான் வந்தது. 5 கோடி சம்பளம் தான் வாங்குறோம்ன்னு நினைச்சு வறுத்தப்பட வேண்டியதில்ல, 50 லட்சம் கூட இல்லாம நெறைய பேர் இருக்காங்க இதே ஃபீல்டுல” எனப் பேசினார். 


 


நடிகர் விமல் இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இதில் இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். " என்று பேசினார்.


Also Read: TNPSC Press Meet LIVE: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பு: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதி... 6 ஆயிரம் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு!