TNPSC Press Meet LIVE: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பு: மே 21 குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு.... ஜூன் மாதம் முடிவுகள்... முழு விபரம் இதோ!

TNPSC Press Meet LIVE Updates: அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் செய்தியாளர் சந்திப்பு அப்டேட் இதோ!

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 18 Feb 2022 01:04 PM
TNPSC LIVE: தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதலாம்

200 மதிப்புகளுக்கான தேர்வில், 100 மதிப்பெண் தமிழில் தகுதி மதிப்பெண் என அறிவிப்பு. தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். 

TNPSC Press Meet LIVE: விண்ணப்பிக்கும் தேதிகள் இதோ

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

TNPSC Press Meet LIVE: காவல்துறையில் புதிய தேர்வு

காவல்துறையில் முதன் முறையாக சிறப்பு பிரிவு உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடைபெற உள்ளது. 

TNPSC Press Meet LIVE: தேர்வு முடிவுகள் ஜூன் 5 ல் வெளியிடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிப்பு

தேர்வு முடிவுகள் ஜூன் 5 ல் வெளியிடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிப்பு

117 மையங்களில் தேர்வு

32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறம் என அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

பிப். 23ல் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை

டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை, பிப்ரவரி 23 ம் தேதி வெளியிடப்படும்

32 மையங்களில் முதன்மை தேர்வு நடைபெறும்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான முதன்மை தேர்வுகள், தமிழ்நாடு முழுவதும் 32 மையங்களில் நடைபெறும் 

75 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதி

தமிழ்நாட்டில் 9 லட்சத்திற்கு மேல் விண்ணப்பங்கள் வரும் என நம்புகிறோம். ஒரு பதவிக்கு 10 பேர் மீதும், 75 ஆயிரம் பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிப்போம். மெரிட் அடிப்படையில் அந்த தேர்வு இருக்கும். 

2018 க்கு பின் தேர்வுகள் நடத்தப்படவில்லை

2018 க்கு பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடத்தப்படவில்லை . டிஎன்பிஎஸ்சி

124 பணியிடங்கள் விளையாட்டுக்கு ஒதுக்கீடு

தற்போது நியமிக்க உள்ள காலிபணியிடத்தில் 124 பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தரப்பட்டுள்ளது. 

ஏபிஆர்ஓ பணியிடம் செய்தி துறையின் பணியில் இல்லை

ஏபிஆர்ஓ பணியிடங்கள் செய்தி துறையின் நியமனத்தில் இல்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

மார்ச் 3 ம் தேதி புதிய அறிவிப்பு

துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3 ம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவிப்பு

மே மாதத்தில் அனைத்து மாறுகிறது

வருவாய் துறை போன்றே, பிற துறைகளின் பணிக்கு ஏற்றார் போல தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மே மாதத்தில் இந்த தகவல் தெரியவரலாம். 

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிகள் நியமினம்

ஆவின், வீட்டுவசதிவாரியம், மின்வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனமும் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற கடிதம் வந்துள்ளது. 

அனைத்து துறை தேர்வுகளும் ஆய்வு

15.2.2022 கூட்டத்தின் அடிப்படையில் அரசின் ஆணையின் அடிப்படையில், அனைத்து துறை தேர்வுகளையும் ஆய்வுக்கு எடுத்துள்ளோம். 

மாலை தேர்வில் எந்த மாற்றமும் இல்லை

மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேரமாற்றமும் இல்லை. ஜெல் பேனா , பால் பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தலாம்


 

முதன்மை தேர்வுகள் நடைபெறும் நேரம்

முதன்மை தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை் 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும். 

Group 2, 2A Exam Date: மே 21 குரூப் தேர்வுகள்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும்.  மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

2016-2021 வரையிலான காலி பணியிடம்

2016 முதல் 2021 வரை உள்ள காலி பணியிடங்கள் பெறப்பட்டுள்ளன. -டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

TNPSC: டிஎன்பிஎஸ்சி வழியாக பணியாளர்கள் நியமனம்

பல்கலை கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டிஎன்பிசியிடம் ஒப்படைக்க தமிழ்நாடு உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

TNPSC Press Meet: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பு எதிர்பார்ப்பு

டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதால், இளைஞர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது

TNPSC Group 2, 2A Exam Date: குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு தேதி என்ன

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான தேதி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது

6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விபரம்

தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையத்தில் 6 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது

11 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு தேதிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சரியாக 11 மணிக்கு நடைபெறும்

Background

TNPSC Press Meet LIVE Group 2, 2A Exam date 2022


தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம்,(டிஎன்பிஎஸ்சி) குரூப்-2(Group 2), குரூப்-2ஏ(Group 2A) தேர்வுக்கான தேதிகள் மற்றும் 6 ஆயிரம் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட உள்ளது. அது தொடர்பான அப்டேட் இதோ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.