ஹேப்பி பர்த் டே குட்டி சியான் என தனது மகனான துருவ் விக்ரமிற்கு நடிகர் விக்ரம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான், கோப்ரா உள்ளிட்ட படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இதேபோன்று கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் நீண்ட நாட்களாக திரைக்கு வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு, துருவ நட்சத்திரம் நவம்பர் 24ம் தேதி ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படம் 2019ம் ஆண்டு வெளியாகி தோல்வியை தழுவியது. அடுத்ததாக துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர்களை சேர்த்து கொண்டார். இந்த சூழலில் மாமன்னன் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் புது படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கவின் நடித்த டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்க இருக்கும் மற்றொரு படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் 26 வது பிறந்த நாளை கொண்டாடும் துருவ் விக்ரமிற்கு அவரது தந்தையான விக்ரம் வாழ்த்து கூறியுள்ளார். துருவ் விக்ரமின் சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்ட விக்ரம், குட்டி சியானுக்கு ஹேப்பி பர்த் டே என கூறியுள்ளார். சிறுவனாக கியூட் லுக்கில் இருக்கும் துருவ் விக்ரமின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம கியூட் என கருத்து பகிர்ந்து வருகின்றனர். இதேபோன்று, நீலம் ஸ்டுடியோஸ் தரப்பில் துருவ் விக்ரமிற்கு வாழ்த்து கூறப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் படத்தில் துருவ் விக்ரம் கபடி பிளேயராக நடிக்கிறார். அதனால், கபடி டீ ஷர்ட்டில் துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்களை நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் துருவ் விக்ரமிற்கு அவரது நண்பர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Dhruva Natchathiram: வந்தது விடிவு காலம்..! நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது விக்ரமின் ”துருவ நட்சத்திரம்” திரைப்படம்