தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , மோகன் , லைலா , பிரேம்ஜி , வைபவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயினெமெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மாஸ்கோ , தாய்லாந்து , இலங்கை , இஸ்தான்புல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தந்தை மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் விஜய் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக டீஏஜீங் தொழில் நுட்பத்தை படக்குழு பயன்படுத்தியுள்ளது.
விஜய் பிறந்தநாள் அப்டேட்
தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது . இதனைத் தொடர்ந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியானது. தற்போது ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு தி கோட் படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருக்கிறது. தி கோட் படத்தில் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளதாகவும் இதில் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தி கோட் படத்தின் சேட்டலைட் உரிமம்
இந்த சிறப்பு அப்டேட் வெளியாவதற்கு முன்பாக குட்டி அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தி கோட் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்