விலை உயர்ந்த பறவைகளுடன் கொஞ்சி விளையாடும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் வீடியோ இணையத்தில் வைரலகை வருகிறது.


சகாப்தம், மதுரை வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சண்முக பாண்டியன் அடுத்ததாக படை தலைவன் படத்தில் நடித்து வருகிறார். காட்டு யானைகளின் வாழ்வியலை கூறும் இந்த படத்தை அன்பு இயக்குகிறார். விஜயகாந்த் அரசியலில் அதிகம் ஆர்வம் கட்டவில்லை என்றாலும், சண்முக பாண்டியன் கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். 


அண்மையில் தனது தந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரப்படுவதாகவும் சண்முக பாண்டியன் பேசி இருந்தார். திரையில் நடிப்பது மட்டும் இல்லாமல் இசை, பாடல் உள்ளிட்டவற்றிலும் சண்முக பாண்டியன் கவனம் செலுத்தி வருகிறார். 


இந்த நிலையில் விலை உயர்ந்த பறவைகளுடன் கொஞ்சு விளையாடும் சண்முக பாண்டியனின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் அழகாய் நீண்ட அலகுகளை கொண்ட மெகாவ் கிளியை தனது தோளில் வைத்திருக்கும் சண்முக பாண்டியன், அவரது கையை நீட்டியதும் காக்டைல் பறவை வந்து அமர்ந்து அவரை கொஞ்சுகிறது. சண்முக பாண்டியன் பேசுவதற்கு காக்டைலும் பதிலுக்கு பேசுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






சண்முக பாண்டியன் வைத்திருக்கும் மெகாவ் கிளியின் விலை ரூ.35,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம் என்றும், காக்டைல் பறவையின் விலை ரூ.25000 என்றும் கூறப்படுகிறது. 


இதேபோன்று நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கொண்டையுடைய காக்டைல் பறவையை வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு காக்டைல் பறவையுடன் இருக்கும் வீடியோவை காளிதாஸ் ஜெயராம் வெளியிட்டிருந்தார். பொதுவாக வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வைத்திருக்க எல்லாரும் ஆசைப்படுவார்கள். திரை பிரபலங்கள் நாய், பூனைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் ஒருசிலர் விலை உயர்ந்த பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிளிகள் மனிதர்களுடன் எளிதில் நெருங்கி பழகுவதுடன், கொஞ்சி பேசுவதாலும் அதன் மீதான ஈர்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. 






மேலும் படிக்க: Dhruv Vikram: 'ஹேப்பி பர்த் டே குட்டி சியான்...' - குட்டி மகன் புகைப்படத்துடன் க்யூட் வாழ்த்து சொன்ன விக்ரம்!


Dhruv Vikram: கனவுகள் நிஜமாகும் காலம்.. துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்.. அப்டேட் தந்த பா.ரஞ்சித்!