இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி  ‘நான்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த படங்களுக்கென்று தனி ரசிகர்கள் உருவாகினர். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.


அவர் அடுத்ததாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் அடுத்த பாகமாக தயாராகிறது.


இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.



 


பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை அமைக்கிறார். இன்ஃபினிட்டிவ் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.


இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையை விஜயகாந்த்திடம் படக்குழு ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும்  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.




தனது மகன் சண்முகபாண்டியன் அறிமுகமான சகாப்தம் என்ற படத்தில் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. ஒருவேளை மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்கும்பட்சத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு திரையில் மீண்டும் தோன்றுவார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Miss Universe 2021: பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து... அரியானா அழகி... இனி உலக அழகி!


Survivor Tamil GrandFinale: ஜூரோ ஓட்டு வேனசா... கமாவுக்கு புள்ளி வைத்த உமாபதி...முரண் சரண்... சாம்பியன் விஜயலட்சுமி!


Viveka Lyricist Interview : ’ஓ சொல்றியா, ஓ,ஓ சொல்றியா பாடலை ஆண்கள் எதிர்க்கவில்லை, கொண்டாடுகின்றனர்’ பாடலாசிரியர் விவேகா கலகல பேட்டி..!


Ajith Latest Video: அஜித்துக்கு ஐடியா கொடுத்தாரா... அறிவுரை கொடுத்தாரா போனிகபூர்? அவரே பகிர்ந்த வீடியோ!


project K | தடபுடல் விருந்து... செம கவனிப்பு... தீபிகா படுகோனை வரவேற்ற பிரபாஸ்! - வைரலாகும் புகைப்படம்!