project K | தடபுடல் விருந்து... செம கவனிப்பு... தீபிகா படுகோனை வரவேற்ற பிரபாஸ்! - வைரலாகும் புகைப்படம்!

"இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களான பிரபாஸ் மற்றும் தீபிகாபடுகோன் உலகின் மிகப்பெரிய கேமராவில் கைகோர்கின்றனர்.”

Continues below advertisement

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இறுதியாக அவர் நடித்த சாஹூ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, அடுத்த படத்தின் கதைத்தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அவரது எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அறிவியல் புனைக்கதை என கூறப்படும் சயின்ஸ் ஃபிக்ஸனாக உருவாகவுள்ள அந்த படத்திற்கு project K என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை நாக் அஷ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது.  முன்னதாக தயாரிப்பு நிறுவனம். முன்னதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.அதில் தீபிகா படுகோன் மற்றும் பிரபாஸ் இருவரும் கைகளை இணைத்தபடி இருக்க அது கேமராவில் பதிவாகிக்கொண்டிருந்தது. அதற்கு கேப்ஷனாக “ இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களான பிரபாஸ் மற்றும் தீபிகாபடுகோன் உலகின் மிகப்பெரிய கேமராவில் கைகோர்கின்றனர்.” கொடுத்திருந்தனர். 

Continues below advertisement

அது வைரலானதை தொடர்ந்து தற்போது தீபிகா படுகோன் பகிர்ந்த மற்றொரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.டிசம்பர் 4 ஆம் தேதி, ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பிற்காக தீபிகா படுகோன் ஹைதராபாத் வந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் தீபிகா மற்றும் பிரபாஸ் இருவரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தனது மாநிலத்திற்கு வந்த நடிகையை பிரபாஸ் தடபுடல் விருந்துடன் வெகுவாக கவனித்துள்ளார். பொதுவாக தனக்கு நெருக்கமானவர்களையோ அல்லது முக்கியமானவர்களுக்கான உணவை வீட்டிலேயே சமைத்து அவர்களை உபசரிப்பது பிரபாஸின் வழக்கம் . அந்த வகையில் தீபிகா படுகோனுக்கு ஐதராபாத்தின் பாரம்பரிய உணவுகளை சமைத்துக்கொடுத்து கௌரவித்துள்ளார் பிரபாஸ். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு வீட்டில் பிரியாணி சமைத்து அதனை அவருக்கு அனுப்பியிருந்தார். அதனை ஸ்டோரியில் பதிவிட்ட கரீனா கபூர் “ பாகுபலி அனுப்பிய பிரியாணி “ என கூறியிருந்தார்.பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம் திரைப்படம்  தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement