கொடைக்கானலில் விஜயகாந்த் மறைவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு  விஜயகாந்த் அவர்களது பெயர் வைக்க வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள் இன்று!




நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனது பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரபல நடிகரான பாபி சிம்ஹா கலந்து கொண்டார் . நடிகர் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினார் .


Breaking News LIVE: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி




தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொடைக்கானலில் சுமார் 300 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் இதன் மூலம் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்தார் . தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் . தொடர்ந்து பொது மக்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.