Lady Superstar Nayanthara: ரோட்டுக்கடை.. சாப்பாடு.. ரகசியம் உடைத்த நயன்தாரா!

ரகசியமான இடம் என்று எதுவுமில்லை. ஆனால், சென்னையில் சாப்பிடுவதற்கு பல இடங்களுக்கு செல்வோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல முடியாது - நயன்தாரா

Continues below advertisement

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.  பொதுவாக எந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும், அவர் ஈடுபடுவது இல்லை. அட்லீயின் 'ராஜா ராணி' படத்திற்காக அவர் கடைசியாக 2013-ஆம் ஆண்டில் தொலைக்காட்சி புரோமோஷனில் ஈடுபட்டார்.  

Continues below advertisement

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் சில தினங்களுக்கு முன்பு  வெளியானது. கொரியத் திரைப்படமான Blind என்பதன் ரீமேக் இந்த திரைப்படம்.

இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார். திரை மற்றும் தனி வாழ்க்கை குறித்த பல்வேறு  கேள்விகளுக்கு மனம் திறந்து பேசினார். 

பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), சென்னையில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி ரகசியமாக சென்றுவரும்  பகுதிகள் குறித்து நயன்தாராவிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அவர், " ரகசியமான இடம் என்று எதுவுமில்லை. ஆனால், சென்னையில் சாப்பிடுவதற்கு பல இடங்களுக்கு செல்வோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல முடியாது. கடைகள் மூடும் நேரம் பார்த்து செல்வோம்" என்று தெரிவித்தார். 

என்ன விரும்பி சாப்பிடுவீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "எல்லாமே....."என்ற சமத்தாக பதிலளித்தார்.  நாங்கள் உணவு விரும்பிகள். பிரியாணி உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவோம். சில நேரங்களில் ரோட்டுக் கடைகளில் சாப்பிடுவோம்! என்று தெரிவித்தார். 

நயன்தாராவிடம் கையில் அணிந்துள்ள மோதிரம் குறித்து   டிடி கேள்வி எழுப்பினார். அதற்குப்பதிலளித்த நயன்தாரா, அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரம் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

மேலும், விக்னேஷ் சிவனிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? என்று தொகுப்பாளர் டி.டி. கேட்டதற்கு விக்னேஷ் சிவனிடம் எல்லாமே பிடிக்கும் என்று புன்னகையுடன் பதிலளிப்பார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நயன்தாரா பகிர்ந்து கொண்டார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்த நானும் ரெளடிதான் படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின்போது நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் எப்போது திருமணம் என்று எதிர்பார்த்திருந்த அவர்களது ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக நயன்தாராவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால், விரைவில் நயன்தாராவிற்கு திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், வாசிக்க:

Nayanthara Chai Waale Investment: ‛டீ’க்கடை அதிபரானார் நயன்தாரா; சுடச்சுட ‛நயன்’ டீ எங்கெங்கு கிடைக்கும்?

Nayanthara in Horror | இரண்டு வருடங்களுக்கு நோ கால்ஷீட்..?! மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா! 

Continues below advertisement
Sponsored Links by Taboola