கிழக்கு வாசல் சீரியலில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்பான ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.


பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எக்கச்சக்கமாக வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அனைத்து சேனல்களும் ஒரே மாதிரி கான்செப்ட்டை  கையில் எடுத்திருக்கிறது என சொல்லப்பட்டாலும் திரைக்கதையில் செய்யும் மேஜிக் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகிறது. குறிப்பாக ஒவ்வொரு சீரியல்களும் பல முன்னணி பிரபலங்களை கொண்டு எடுக்கப்பட்டாலும் எதில் கதை வலுவாக உள்ளது அதையே ரசிகர்கள் பேவரைட் ஆக ஏற்றுக் கொள்வார்கள்.


கிழக்கு வாசல் சீரியல்


சன் டிவியில் பல சீரியல்களில் கலக்கிய ராதிகா தற்போது விஜய் டிவிக்கு  தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் சீரியல் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த சீரியலுக்கு கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு கிழக்கு வாசல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இதுவரை 2 நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பான நிலையில், அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஜானகி சுரேஷ் ஆகியோருக்கு 60வது கல்யாண வைபவ நிகழ்வுக்காக குடும்பத்தினர் திருக்கடையூர் அபிராமி கோயிலுக்கு செல்லும் காட்சிகள் இடம் பெற்று வருகிறது. அதற்காக ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள்.அப்போது தனது குடும்பத்தினர் ஒவ்வொருவர் பற்றியும் எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றது. 



அப்படி இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில், எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் வெங்கட் ராகவனை குறிப்பிட்டு இவன் நன்றாக பாட்டு பாடுவான் என சொல்லி பாட வைக்கிறார். அவரும்  மரகதநாணயம் படத்தில் “நீ கவிதைகளா” பாடலை பாட அதன் பின்னணியில் ரேஷ்மா முரளிதரன் உடனான காதல் காட்சிகள் கனவுகளாக வெங்கட் ராகவனுக்கு வந்து செல்கிறது.அதேசமயம் இந்த பக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவி ஜானகி சுரேஷ் காதல் பார்வையோடு பார்க்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், எஸ்.ஏ.சந்திரசேகரை “கபாலி” பட ரஜினிகாந்த் என்றும், ‘இதையெல்லாம் விஜய் பார்த்தால் என்னாகும்?’ குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Kizhakku Vaasal, August 09: என்னடா லவ் பாட்டு போடுறீங்க? .. கிழக்கு வாசல் சீரியல் அலப்பறை.. இன்றைய எபிசோட் அப்டேட்..!