Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம். 


நேற்றைய எபிசோடில், சாமியப்பன் தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் அவர் தயாளனையும், விஜி மற்றும் அர்ஜூனை அறிமுகப்படுத்த அழைக்கிறார். ஆனால்  நியாயமா பார்த்தா எங்களைத்தானே முதல்ல கூப்பிட்டிருக்கணும் என சாமியப்பனை குத்தி காட்டுகிறார். தான் ஒரு அட்வகேட் என்றும், தனது மகன் அர்ஜூன் தான் இந்த குடும்பத்தில் அதிகம் படித்தவர் என்றும் சொல்லிகாட்ட மற்றவர்கள் கடுப்பாகின்றனர். 


அடுத்ததாக ரேணுகா பற்றி கேட்கப்படுகிறது. அதற்கு ரேணு என்னுடைய பொண்ணு மட்டுமல்ல அதற்கும் மேல சாமியப்பன் சொல்கிறார். எங்க குடும்பத்தோட பொக்கிஷம் ரேணு என சிவகாமி புகழ்கிறார். தொடர்ந்து ஷண்முகம் பாடுவார் என சாமியப்பன் சொல்ல, அதனை நடேசன் கிண்டல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் “நீ கவிதைகளா” பாடல் ஓட காதல் காட்சிகள் களைகட்டுகிறது. அனைவரும் ஷண்முகத்தை பாராட்டுகின்றனர். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு ஷண்முகமும், அர்ஜூனும் ரேணுகாவை நினைத்து உருகுகின்றனர். 



இதில் அர்ஜூன் ரேணுகாவை பார்ப்பதை அவரது அப்பா தயாளன் பார்த்து முறைக்கிறார். அனைவரும் திருக்கடையூர் வந்து சேர்கின்றனர். அப்போது தயாளன் காலில் சேறு பட்டு விடுகிறது. அவர் வேண்டுமென்று அந்த பக்கம் வரும் ஷண்முகத்தை துடைத்து விட சொல்கிறார். முதலில் தயங்கும் ஷண்முகம், உள்ளே சென்று துணியை எடுத்து வேகமாக செல்வதை ரேணு பார்க்கிறார். பின்னால் சென்று தயாளன் ஷூவில் சேற்றை ஷண்முகம் துடைப்பதை பார்த்து டென்ஷனாகிறார். தயாளனிடம் என்னவென்று கேள்வி கேட்கிறார். எப்படி இந்த வேலையை ஷண்முகம் செய்ய சொல்லலாம் என்றும், அழுக்கு இவர் மனசுல தான் இருக்கு என கத்துகிறார். 


தயாளனுக்கு சப்போர்ட்டாக விஜி பேச, ரேணு மேலும் எகிறுகிறார். யாரையும் தாழ்வா நினைக்காதீங்க என அட்வைஸ் மழை பொழுகிறார். அர்ஜூன் ரேணுவை சமாதானம் செய்ய, நீங்க செய்வீங்களா? என பதில் கேள்வியெழுப்புகிறார். இந்த சண்டையை பார்வதி பார்த்து அங்கு வந்து என்னவென்று கேட்கிறார். ரேணு அவரிடம் தயாளன் பற்றி குறை சொல்கிறார். இதனால் தயாளன் குடும்பத்துக்கும், ரேணுவுக்கும் சண்டை வெடிக்கிறது. ஆனால் பார்வதி குறுக்கிட்டு பிரச்சினையை நிறுத்தி ரேணுவை அழைத்து செல்கிறார். 


பின்னர் சாமியப்பன் -சிவகாமி 60வது கல்யாண வைபம் இனிதே தொடங்குகிறது. ஆனால் நடேசன் பணம் விஷயமாக போன் யூஸ் பண்ணுவதை கண்டு மனைவி பார்வதி கோபப்படுகிறார். பின்னர் சாமியப்பன் -சிவகாமி இருவருக்கும் கல்யாணம் நடைபெறுகிறது.